விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers - PLV) பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம்.

Continues below advertisement

சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள்

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers - PLV) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தகுதியான நபர்கள் இந்தத் தற்காலிகப் பணியிடங்களுக்கு நவம்பர் 06, 2025-க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் : சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers)மொத்த காலியிடங்கள் : 24 பணியிடங்கள்விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2025

Continues below advertisement

பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள இடங்கள்:

இந்தப் பணியிடங்கள் விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிலும், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கீழ்க்கண்ட வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களிலும் நிரப்பப்பட உள்ளன:

  • திண்டிவனம்
  • விக்கிரவாண்டி
  • செஞ்சி
  • வானூர்
  • திருவெண்ணெய்நல்லூர்
  • உளுந்தூர்பேட்டை
  • கள்ளக்குறிச்சி
  • சங்கராபுரம்
  • திருக்கோவிலூர்

கல்வி மற்றும் வயது தகுதிகள்:

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் எழுத்தறிவு பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயதுத் தகுதி: 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு மற்றும் ஊதியம்:

தேர்வு முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்/மதிப்பூதியம்: பணிபுரியும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.750 மதிப்பூதியமாக வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சமூகத்தில் பல்வேறு வகைகளில் பங்களிக்கக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களை அனுப்பலாம்:
  • https://cdnbbsr.s3waas.gov.in/s3ec045d2c2cee8ab0b9a36bd1ed7196bd/uploads/2025/10/2025102391.pdf என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • தேவையான கல்விச் சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பின்வரும் முகவரிக்கு 06.11.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், விழுப்புரம் - 605602.

இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையிலானவை. விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.