விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.


நாள் : 19.01.2024 வெள்ளிக்கிழமை 


இடம்:  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம் 


நேரம் :   காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. 


வயது:  18 வயது முதல் 40 வயது வரையிலான வேலை நாடுனர்கள்  கலந்து கொள்ளலாம்.


கல்வித்தகுதி :  8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். 


20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 1000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம் முகாமில் ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம் வேலை நாடுனர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் தகுதிக்கு ஏற்ற சிறந்த ஊதியத்தில் பணி நியமன ஆணைபெறலாம். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 / 9080515682 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.