நீலகிரி மாவட்டத்தின் உதகமண்டலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் குழுக்களில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட திட்ட மேலாண்மை பிரிவு, தகவல், கல்வி தொடர்பு பிரிவு ஆகிய அலுவலகங்களில் இந்த வேலைவாய்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் பணியமர்த்தப்படுவர்.
பணி விவரம்
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர்
தகவல், கல்வி (ம) தொடர்பு ஆலோசகர்
கல்வித் தகுதி
திட்டமிடல் துறையில் உள்ள பணிக்கு விண்ணப்பிக்க B.Tech/MBA/MSC பட்டம் படித்திருக்க வேண்டும்.
தகவல், கல்வி (ம) தொடர்பு ஆலோசகர் பணிக்கு விண்னப்பிக்க மாஸ் மீடியா, Mass Communication துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் - ரூ.35,000/-
தகவல், கல்வி (ம) தொடர்பு ஆலோசகர்- ரூ.25,000/-
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கையொப்பமிட்டு தேவையான தகுதி ஆவணங்களின் நகல்களுடன் அனுப்ப அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Programme Officer,
District Rural Development Agency,
Ooty-643001.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 06.02. 2024
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2024/01/2024013023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
திருச்சியில் வேலைவாய்ப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்குட்பட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 3-ம் தேதி கடைசி நாள்.
பணி விவரம்:
அலுவலக உதவியாளர்
அந்தநல்லூர், லால்குட், மணிகண்டம், மண்ணச்சநல்லூர், மருங்காபுரி, முசிறி, தொட்டியம், திருவெறும்பூர், துறையூர், உப்புலியபுரம், வையம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அலுவலகங்களில் தேர்வு செய்யப்படுவர் பணி அனுப்பப்படுவர்.
கல்வித் தகுதி:
இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியம் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவி செய்தல் வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
01.07.2023 அன்று 18 வயது நிரம்பியவர்களும் 32 வயதுக்கு மிகாமில் இருக்க வேண்டும்.
ஊதியம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.15,700 -ரூ.50,000/- வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்க https://tiruchirappalli.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
ஆணையர்,
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
திருச்சிராப்பள்ளி - 639 101
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://tiruchirappalli.nic.in/notification-for-filling-up-of-vacancies-of-record-clerk-and-office-assistant-in-panchayat-unions-in-tiruchirappalli-district/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.02.2024 பிற்பகல் 5.45 மணி வரை