மத்திய பாதுகாப்பு துறையில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரேஸ்மேன் மற்றும் ஃபையர்மேன் பணியிடங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ’ARMY ORDNANCE CORPS ‘ என்பதன் கீழ் பணிபுரிவதற்கான தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பணி விவரம்:
Tradesman - 1249
Fireman - 544
மொத்த பணியிடங்கள் - 1793
பணியிட விவரம்:
இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் அஸாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், லடாக், டெல்லி, பஞ்சாப், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா, தெலங்கான, ஹரியானா, சிக்கம், மேற்கு வங்காளம், இராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் பணியமர்த்தப்படுவர்.
Probationary period :
இந்தப் பணிக்கு தேர்தெடுக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
Tradesman பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாவது அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழில்துறை சார்ந்து பயிற்சி படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Fireman பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வின் விவரம்:
ஊதிய விவரம்:
Tradesman Mate - ரூ. 18,000/- முதல் ரூ. 56,900/- வரை
Fireman - Level 2 ரூ. 19,900/- முதல் ரூ. 63,200/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
இதற்கு உடற்தகுதித் தேர்வு, திறனறிவு தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு ஆன்லைனின் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். https://www.aocrecruitment.gov.in/ -என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்
தேர்வு மையம்:
எழுத்துத் தேர்விற்கு ஐந்து மையங்கள் அறிவிக்கப்படும். ஹால் டிக்கெட் அறிவிக்கப்படும்போது, அதோடு தேர்வு மையம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.02.2023
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.aocrecruitment.gov.in/AOC-PDF/DetailedAdvertisement.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..
விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி: - MRB Recruitment 2023: 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; 335 பணியிடங்கள்; தமிழ்நாடு அரசுப் பணி; உடனே அப்ளை பண்ணுங்க!
விண்ணப்பிக்க வரும் 23-ஆம் தேதி கடைசி - TNPSC: ரூ.2.11 லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி... விண்ணப்பித்துவிட்டீர்களா?