புதுச்சேரி : புதுச்சேரியில் இயங்கி வரும் புகழ்பெற்ற ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ள செவிலியர் (Project Nurse) மற்றும் தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் மற்றும் தரவு உள்ளீட்டாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.07.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Project Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

Continues below advertisement

கல்வித் தகுதி: B.Sc. Nursing/ GNM படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 25.07.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 23,600 

Data entry operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 25.07.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,000 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜிப்மர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய அங்கே கிளிக் செய்யவும்.

https://jipmer.edu.in/sites/default/files/Advertisement%20for%20Recruitment%20to%20Project%20Posts%20Project%20Nurse%20II%20and%20Data%20Entry%20Operator%20for%20the%20hospital%20based%20stroke%20registry%20for%202026-27%20by%20Department%20of%20Neurology..pdf

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தைப் பிரிண்ட் எடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும். அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து jipmer.hbsr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.