புதுச்சேரி: புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தரவு உள்ளீட்டாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.04.2026 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.

Continues below advertisement

ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் வேலைவாய்ப்பு:

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனமான ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) காலியாக உள்ள தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணியானது முற்றிலும் தற்காலிக அடிப்படையில் (Temporary Basis) நிரப்பப்பட உள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்: தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)

Continues below advertisement

காலியிடங்கள்: 01

மாதச் சம்பளம்: ரூ. 20,000

கல்வி மற்றும் தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பின்வரும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்:

  • BCA (Bachelor’s degree in Computer Applications)
  • B.Tech (Biotech)
  • B.Sc (Nursing)

கூடுதல் தகுதியாகக் கணினியைச் சிறப்பாக இயக்கத் தெரிந்திருப்பது அவசியமாகும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 31.03.2025 அன்று 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடத்திற்குத் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்காகத் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தகுதியுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம்.

நேர்காணல் குறித்த முக்கியத் தகவல்கள்:

நேர்காணல் நடைபெறும் நாள்: 08.04.2026

நேர்காணல் நடைபெறும் இடம்: சிறுநீரகவியல் துறை (Department of Nephrology), ஜிப்மர் மருத்துவமனை (JIPMER),புதுச்சேரி – 605006.

விண்ணப்பதாரர்களுக்குக் குறிப்பு:

நேர்காணலுக்கு வரும் நபர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நிழற்பட நகல்களைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விவரங்களை ஜிப்மர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிப்பின் வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம்.