புதுச்சேரி: ஜிப்மரில் 454 நர்சிங் அதிகாரி பணிகளை நிரப்ப போட்டி தேர்வு; நாடு முழுதும் எய்ம்ஸ் மர்றும் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் 3,500 நர்சிங் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ( ஜிப்மர் ) இந்தியாவின் பாண்டிச்சேரியில் அமைந்துள்ள ஒரு மருத்துவப் பள்ளியாகும் . ஜிப்மர் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் (INI) மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு பரிந்துரை மருத்துவமனையாகும். இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

ஜிப்மரில் 454 நர்சிங் அதிகாரி பணிகளை நிரப்ப போட்டி தேர்வு

புதுச்சேரி ஜிப்மரில் 454 நர்சிங் அதிகாரி பணியிடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. நாடு முழுதும் எய்ம்ஸ் மர்றும் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் 3,500 நர்சிங் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள் ளது. மருத்துவ பணியிடங்களை அதிகரிக்க ஜிப்மர் நிர்வாகம் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கோப்பு அனுப்பியது. 947 பணியிங்கள் புதிதாக உருவாக்க கோப்பு அனுப்பப்பட்டதில், 557க்கு உருவாக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

Continues below advertisement

அதிகபட்சமாக 400 செவிலியர் அதிகாரி பணியிடங்களை உருவாக்க அனுமதி தந்தது.நாடு முழுவதும் நிரப்ப உள்ள நர்சிங் பணியிடங்களில் புதுச்சேரி, ஏனாமில் தற்போது 454 நர்ஸ் பணியிடங்களை முடிவு பூர்த்தி செய்ய செய்து அறிவிப்பு வெளி யாகியுள்ளது. அதன்படி நர்சிங் அதிகாரி பொது தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 30 வயதுக் குள் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம்ஆக., 11ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக் கலாம்.

விண்ணப்ப கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி., பிரிவுக்கு ரூ. 3 ஆயிரம், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் இ.டபுள்.யூ.எஸ் பிரிவுக்கு ரூ. 2400ம் செலுத்த வேண் டும். ஆன்லைனில் முதல் நிலைத் தேர்வு செப்., 14ம் தேதியும், மெயின் தேர்வு செப்., 27ம் தேதியும் நடக் கும். புதுச்சேரியில் 446 பணியிடங்களும், மில் 8 பணியிடங்களும் ஏனா தேர்வுகள் மூலமாக நிரப் பப்படும். கூடுதல் தகவல் களுக்கு www.jipmer.edu. in என்ற ஜிப்மர் இணை யத்தில் வேலைவாய்ப்பு பிரிவை பார்க்கலாம்.

இட ஒதுக்கீடு வாரியாக

புதுச்சேரி ஜிப்மரில் 446 இடங்களை நிரப்ப தேர்வு நடக்கிறது. புதுச்சேரியில் பொதுப்பிரி வில் பெண்-144, ஆண்-36 என, 180 இடங் கள் நிரப்பப்பட உள்ளது. ஓ.பி.சி., பிரிவில் 121 இடங்களில் பெண்கள்- 97, ஆண்-24 என 121 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளது.எஸ்.சி., பிரிவில் 63 இடங்களும் பெண் -51, ஆண்-12 என 63 இடங்களும், எஸ்.டி., பிரிவில் பெண் -27, ஆண் -6 என 33 இடங்கள், இ.டபுள்.யூ.எஸ்., பெண் கள் -40, ஆண்கள்- 9 என, 49 இடங்கள் நிரப் பப்பட உள்ளது. உள் ஒதுக்கீட்டாக மாற்றுத்திற னாளிகளுக்கு பெண்கள் -32, ஆண்கள் 7என 39 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

செவிலியம்

செவிலியம் என்பது  சுகாதார துறை சார்ந்த தொழிலாக உள்ளது.  தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் இவற்றின் சுகாதாரம் பற்றிய கவனம்,  பாதுகாப்பு, மற்றும் அவர்களது தரமான வாழ்க்கைக்கு உகந்தவைகளை மீட்க செவிலியர்கள் செயல்படுகின்றனர்.ஆரோக்கிய பராமரிப்பு வழங்குநர்கள்,  நோயாளி அணுகுமுறை, பராமரிப்பு, பயிற்சி, மற்றும் செவிலியர்கள் நடைமுறையில் உள்ள வரம்புகள் என பல  மாறுபட்ட நிலைகளில் செவிலியர்கள் உள்ளனர். மருந்து பரிந்துரைத்தலில் செவிலியர்களுக்கு பல பயிற்சிகள் வழங்கப்படுகிறது.