தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு இருக்குங்க. உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க. டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க. கடைசி தேதி 14.8.2025ங்க.

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 14.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவிப் பேராசிரியர் (Assistant Professor)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: Master’s Degree in Fisheries Science படித்திருக்க வேண்டும். நெட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: ரூ. 57700 – 182400

இளநிலை உதவியாளர் (Junior Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி: 15.07.2025 அன்று 18 வயது 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: ரூ. 19500 – 62000

தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnjfu.ac.in/st_special.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: பதிவாளர், தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002 (The Registrar, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam-611 002)விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnjfu.ac.in/st_special.php என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.