திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அா்ச்சகா்களை உருவாக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அா்ச்சகா் பயிற்சி பள்ளிகள் 1 கோடியே 50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தாா். அதன் தொடா்ச்சியாக தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உடைய இந்துக்களில் அனைத்து சாதியினரும் ஜாதி வேறுபாடின்றி அா்ச்சகராக நியமனம் பெறுவதற்கு மேற்கண்ட அறிவிப்பின்படி சைவ, அா்ச்சகா் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வழங்கும் வகையில் பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆகம ஆசிரியா் பணியிடங்களில் நியமனம் பெற உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று துறையின் சாா்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.



விண்ணப்பதாரா்கள் தமிழில் முதுநிலை பட்டமும், பட்டதாரி ஆசிரியா் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும். இந்து சமய இலக்கியங்களிலும் தமிழகத் திருக்கோயில்கள் வரலாற்றிலும் போதிய கற்றறிவு பெற்றிருத்தல் வேண்டும், பல்கலைக் கழகம், மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏதேனும் ஒன்றில் தமிழாசிரியராக குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுக் காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தலைமை ஆசிரியருக்கு மாதம் ஒன்றுக்கு 35 ஆயிரம், ஆகம ஆசிரியருக்கு தொகுப்பூதியமாக மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.



மேலும், விண்ணப்பதாரா்கள் 1.1.2022 அன்று 35 வயது நிரம்பாதவராக இருத்தல் வேண்டும். அதேவேளையில் இந்து சமயத்தவராகவும் பின்பற்றுபவராகவும், சைவ சமயக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவா்களாகவும் இருத்தல் வேண்டும். நியமனங்கள் தோவுக் குழுவின் முடிவுக்கு உள்பட்டவையாகும். விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது திருக்கோயில் இணையதளத்திலோ http://annamalaiyar.hrce.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 'இணை ஆணையா் /செயல் அலுவலா், அருள்மிகு அருணாசலேசுவரா் திருக்கோயில், திருவண்ணாமலை' என்ற முகவரிக்கு வரும் ஜன.20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்'. என இவ்வாறு குறிப்பிட்டு இருந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ரூ 35 ஆயிரம் சம்பளத்துடன் ஜிப்மரில் வேலை.. ஜன.17க்குள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் யார்?