சென்னை மத்திய கோட்ட அலுவலகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் காப்பீடு விற்பனைக்குப் புதிதாக நியமிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான நேர்காணல் டிசம்பர் 3 நடைபெறுவதாக  அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்தியாவில் உள்ள அனைத்துக்கிராமங்களுக்கும் தனது சேவையைத் திறம்பட நடத்திவருவது  தான் இந்திய அஞ்சல்துறை. மத்திய அரசு நிறுவனமாக அஞ்சல் துறையின் கீழ் போஸ்ட்மேன், தலைமை மேலாளர் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கான தகுதி என்ன? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என தெரிந்துக்கொள்வோம்.





அஞ்சல் முகவர் நேர்காணல் முகவர்களுக்கானத் தகுதி மற்றும் நடைபெறும் இடம்:


கல்வித்தகுதி:


இப்பணிக்கு குறைந்தது 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். அதேப்போன்று டிகிரி முடித்த பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம்.


வயது வரம்பு:


அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்பணிக்கான நேர்காணலில் கலந்துக்கொள்ளவிரும்பும் நபர்கள் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.


அஞ்சல் முகவர் பணிக்கானத் தகுதி பெற்றவர்கள்:


இந்திய அஞ்சல் அலுவலக தபால் அலுவலக பணிக்கு சுய தொழில் செய்யும் நபர்கள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கான்வாடி மற்றும் மகிளா மண்டல் பணியாளர்கள்ஈ சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ளவர்களும் இப்பணிக்கு தகுதி பெற்றவர்கள்.


இதோடு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெற்ற ஆசிரியர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள்.


நேர்காணல் நடைபெறும் இடம்:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில்  நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம்.


நேர்முகத்தேர்வு , எண் 2,


சிவஞானம் சாலை, தியாகராய நகர்,


சென்னை – 600017 ( பாண்டி பஜார் அருகில்) என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் மறக்காமல் இந்த நேர்காணலில் கலந்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள் என சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் செய்திக்குறிப்பின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.





இந்த நேர்காணலில் கலந்துக்கொள்ளும் போது மூன்று புகைப்படத்துடன் ( பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், அசல் மற்றும் இரண்டு நகல், வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுக வேண்டும். இதனையடுத்து தேர்வு செய்யப்படும் நபர்கள், ரூ. 5 ஆயிரத்திற்கு தேசிய சேமிப்புப்பத்திரம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரத்தைப் பணபாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.