மத்திய சட்ட விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் சட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் எனப்படும் மாதாந்திர உள்ளகப்பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக மத்திய அரசின் துறைகள் மூலம் அந்த பட்டப்படிப்பு சார்ந்த மாணவர்களுக்கான பல்வேறு வகையான பயிற்சிகள், வேலை வாய்ப்பு என பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய சட்ட விவகாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மாதாந்திர இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விண்ணப்பிப்பவர்கள் இந்திய மாணவர்களாக இருக்க வேண்டும் என்றும், 3 ஆண்டுகள் சட்ட பட்டப்படிப்பில் 2வது, 3வது ஆண்டு பயில்பவர்கள், ஐந்தாண்டு பட்டப்படிப்பில் 3வது முதல் 5வது ஆண்டு படிப்பவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகத்தில் இருந்து LLB படிப்பை முடித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
2022 ஜூன் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மே மாதம் வரை நடைபெறும் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களில் மாதம் தோறும் 10 முதல் 30 மாணவர்கள் வரை பயிற்சி வழங்கப்படும். இதற்காக https://legalaffairs.gov.in/internship என்ற தளத்தின் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு ஜூன் 8 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிப்பவர்கள் தங்கள் கல்லூரி/ பல்கலைக்கழகத்திலிருந்து தடையில்லா சான்றிதழை பெற வேண்டும். முதலில் வந்தால் முன்னுரிமை என்பதால் கடைசி தேதி வரை காலம் தாழ்த்தாமல் அதற்கு முன்னதாகவே தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி காலம் முடிந்ததும் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கையை பயிற்சி பெறுபவர்கள் மத்திய சட்ட விவகாரத்துறை அமைச்சகத்திடம் சமர்பிக்க வேண்டும்.
பயிற்சியாளர்களின் செயல்திறன் திருப்தியளித்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகையுடன், சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்