மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இதோ!

மத்திய அரசின் இன்லேண்ட் வாட்டர்வேஸ் ஆணையத்தில் வேலை காத்திருக்கு.

Continues below advertisement

மத்திய அரசின் இன்லேண்ட் வாட்டர்வேஸ் ஆணையத்தில் (INLAND WATERWAYS AUTHORITY OF INDIA) பல்வேறு பிரிவுகளில் உள்ள 14 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் மத்திய அரசின் துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

Continues below advertisement

பணி விவரம்:

Deputy Director (Finance & Accounts)

 EDP Assistant  

Junior Hydrographic Surveyor (JHS) 

Stenographer 

Lower Division Clerk (LDC)

கல்வித் தகுதி:

துணை இயக்குநர் பணிக்கு  (Deputy Director(Finance & Accounts)) நிதி துறை சார்ந்த படிப்பான சி.ஏ. (Institute of Charted
Accountants or the SAS Commercial Examination of Indian
Audit ) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐந்தாண்டுகள் நிதி துறை சார்ந்த துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.


EDP உதவியாளர் பணிக்கு கம்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டேட்டா என்ரி செய்வதில் ஓராண்டு கால பணி அனுபவம் வேண்டும்.

Junior Hydrographic Surveyor பணிக்கு விண்ணப்பிக்க சிவில் பிரிவில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மூன்றாண்டு டிப்ளமோ சிவில் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Hydrography துறையில் ஏழு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Stenographer பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஸ்டெனோகிராபர் தொழிற்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 

Lower Division Clerk பணிக்கு 12 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்ரைட்டிங் மெசினில் டை செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதற்கான பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

ஊதிய விவரம்:

துணை இயக்குநர் பணி -ரூ.67,700 முதல் ரூ. 2,08,700 வரை.

EDP Assistant பணி - ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை.

Junior HydrographicSurveyor (JHS) பணி- ரூ. 3,5400 முதல் ரூ.1,12,400 வரை.

Stenographer - D பணி- ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை 

Lower Division Clerk (LDC) பணி - ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் தகுதியானவர்களைக் கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு https://iwai.nic.in/ என்ற ஆன்லைன் முகவரி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக்கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர் , EWS -தகுதி பெற்றோர் ஆகியோர்  ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://cdn.digialm.com//EForms

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 17.12.2022

அறிவிப்பின் முழு விவரம் அறிய https://iwai.nic.in/sites/default/files/Detailed%20advertisement%20for%2014%20posts.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola