India Post Recruitment 2022:
இந்திய அஞ்சல் துறையில் (India Post Office) காலியாக உள்ள 60,544 தபால் காரார், Mail Guard பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தேர்தெடுக்கப்படும் நபர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள அஞ்சலகங்களில் நியமிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையில் வேலை வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். மறந்துடாம விண்ணப்பித்துவிடுங்கள்.
பணி விவரம்:
Postman
Mail Guard
மொத்த பணியிடங்கள்:
Postman -59,099
Mail Guard - 1,445
மொத்தம்- 60,544
கல்வித் தகுதி:
- இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களது மாநில மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டியது அவசியம்.
ஊதிய விவரம்:
லெவல்-3 இன் படி (Level-3 in the pay matrix) ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
தேவையான கல்வி ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி https://www.indiapost.gov.in/VAS/Pages/IndiaPosthome.aspx -யை தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2022
முக்கிய விவரங்களின் முழு விவரத்திற்கு https://www.indiapost.gov.in/VAS/Pages/News/IP_15112022_RR_Draft_Eng.pdf-என்ற லிங்கை கிளிக் செய்யவும்.