சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர்


கல்வி மற்றும் பிற தகுதிகள் 


B.Tech/B.E./B.Sc/BCA படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


C++ தெரிந்திருக்க வேண்டும். PyTorch பற்றிய அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.


பணி காலம்


இது ஓராண்டு கால பணி. பணி திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 


ஊதிய விவரம்


இதற்கு ரூ.16,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. 


தெரிவு செய்யப்படும் முறை


இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.11.2023



இ-மெயில் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in 


தொடர்புக்கு- 044- 2257 9796 9.00 AM முதல்  05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.


வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Technician%20and%20Project%20associate%20-%20Advt-180.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


சென்னை இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் வேலை


மத்திய பணியாளர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation) சென்னை அலுவலகத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


ஈ.சி.ஜி. டெக்னீசியன்


ஜூனியர் ரேடியோகிராஃபர்


ஜூனியர் மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட்


Pharmacist (Allopathic)


Pharmacist (Ayurveda)


Radiographer 


மொத்த பணியிடங்கள் - 56


கல்வித் தகுதி:



  • ஈ.சி.ஜி.  பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். AICTE யின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாக இருக்க வேண்டும்.

  • ஜூனியர் ரேடியாலஜி படிப்பிற்கு 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு ரேடியோகிராபியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 

  • உதவியாளர் பணிக்கு 12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, ஓ.டி. துறையில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  • Pharmacist படிப்பிற்கு  Pharmacy in Ayurveda துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • Radiographer பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 

  • இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாவது மற்றும் 12-வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை


இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்ப கட்டணம்


இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் உள்ளிட்டோருக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். 


பட்டியலின / பழங்குயின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை


https://www.esic.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.10.2023


முகவரி


ESI Corporation, Panchadeep Bhawan, 
143, Sterling Road, Nungambakkam,
 Chennai, Tamil Nadu – 600034.


வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை காண https://www.esic.gov.in/attachments/recruitmentfile/c23c25a3dad3da105d441ef8844b022d.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.