இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) காலியாக உள்ள’ Navik’ (General Duty) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 260 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாளை (27.02.2024) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி விவரம்
Navik - 260
கல்வித் தகுதி:
நாவிக் - ஜென்ரல் டியூட்டி பதவிக்கு மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 22 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கு Pay level 3-இன் படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை:
இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு,மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில், தேர்ந்தெடுக்கபபட்டவர்கள், இந்திய கடற்படை மாலுமிகளின் பயிற்சி மையமான ஐஎன்எஸ் சில்கா-வில் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
தெரிவு செய்யும் முறை
இதற்கு பயோமெட்ரிக் முறையில் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இதற்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு பாடத்திட்டம்
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ரூ.300- ஐ செலுத்த வேண்டும். பட்டியலின , பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://joinindiancoastguard.cdac.in/cgept/- என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
அறிவிப்பின் முழு விவரத்திற்கு -https://joinindiancoastguard.cdac.in/cgept/careerOpportunity/navik/gd- என்ற லிங்கை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட பொதுவான காரணங்கள் பற்றிய அறிந்துகொள்ள https://joinindiancoastguard.cdac.in/cgept/downloads/commonReasonForRejection - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.02.2024 மாலை 5.30 மணி வரை