Indian Bank Recruitment: நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் உள்ள காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் இந்தியன் வங்கிகளில் பணிபுரிய காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது. சென்னை நிர்வாகம் முடிவு செய்யும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க அடுத்த 1,ஜனவரி,2024 -ஆம் தேதி கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
பணி விவரம்:
Consultant for Learning and Development
உதவியாளர் (INDSETI)
இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் சென்னையில் உள்ள வங்கியில் நியமிக்கப்படுவர்.
உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வித் தகுதி:
Consultant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.பி.ஏ. துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.ஏ. சோஷியாலஜி, சைக்காலஜி, அக்ரிகல்சர், ஹார்டிகல்சர் மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு பி.எட். படித்திருக்க வேண்டும்.
Attender பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு:
Consultant பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 40 வயது முதல் 65 வயது வரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 22 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
உதவியாளர் திருப்பத்தூர் - ரூ.20,000/-
உதவியாளர் - ராணிப்பேட்டை - 12,000/-
Attenders - ரூ.8,000/-
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மதிப்பெண் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல், குழு விவாதம் , Psychometric tests, Presentation ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
“Application for Engagement of Consultant for Learning & Development on Contractual Basis” / “Application for Data Protection Officer on Contractual Basis” என்று குறிப்பிட்டு சுயவிவர குறிப்பு மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களுடன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும்.
பட்டியலின/பழங்குடியின பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்ப தொகை ஜி.எஸ்.டி-யுடன் செலுத்த வேண்டும்.
கவனிக்க..
விண்ணப்பதாரர்கள் தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரி இரண்டையும் செயலில் இருப்பதை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது.
நேர்காணல் உள்ளிட்ட தகவல்கள் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி ஒப்பந்தம் அடிப்படையிலானது. பணி நிரந்தரம், பணி இடம் ஆகியவற்றில் இந்தியன் வங்கி நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
முகவரி:
General Manager (CDO), Indian Bank
Corporate Office, HRM Department, Recruitment Section
254-260, Avvai Shanmugham Salai,
Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.
30 நாள் ப்ரோ ராடா விடுப்பு கூடுதல் விடுப்பு, ஊதிய விவரம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அறிவிப்பின் - https://www.indianbank.in/wp-content/uploads/2023/12/Detailed-Advertisement_LD.pdf -லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
உதவியாளர் - https://www.indianbank.in/wp-content/uploads/2023/12/Support-Staff-Recrutiement-for-IndSETI.pdf
உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
The Co-Charmab (IBTRD)
O/O, Zonal Manager,
Indian Bank,
Ghandi Nagar, 8th East Main Road,
Vellor - 632 006
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 01.01.2024