Indian Bank Recruitment: நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் உள்ள காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் இந்தியன் வங்கிகளில் பணிபுரிய சிறப்பு அதிகாரிகள்  காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது. பணியிடம் சென்னையிலா? அல்லது மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள கிளை அலுவலகங்களிலா? என்பது குறித்து வங்கி நிர்வாகம் முடிவு செய்யும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 1-ம்  தேதி கடைசி நாள். 


பணி விவரம்



  • தலைமை மேலாளர் (Chief Manager – Credit_  – 10 

  • முதன்மை மேலாளர் (Senior Manager – Credit) – 10

  • உதவி மேலாளர் (Assistant Manager – Security) – 11

  • தலைமை மேலாளர் Chief Manager – MSME Relationship – 05

  • மேலாளர் (Manager – MSME Relationship) – 10

  • தலைமை மேலாளர் (Chief Manager – Digital Marketing) – 1

  •  முதன்மை மேலாளர் (Senior Manager – SEO and Website specialist) – 1 

  • முதன்மை மேலாளர் (Senior Manager-Social Media specialist )– 1 

  • முதன்மை மேலாளர் (Senior Manager – Creatives expert) – 1 

  • முதன்மை மேலாளர் (senior Manager – Forex/Trade Finance) – 5

  • மேலாளர்(Manager – Forex/Trade Finance) – 5

  • தலைமை மேலாளர் (Chief Manager – Treasury Dealer) – 1

  • மேலாளார் (Manager-Trading/Arbitrage In Currency Futures) – 1 

  • மேலாளர் (Manager-Trading In Interbank FXSpot: USD/INR) – 1 

  • மேலாளர் (Manager-Trading In Interbank Cross Currency FX-Spot) – 1

  •  முதன்மை மேலாளார் (Senior Manager-Trading In Interbank Cross Currency FXSpot )– 1 

  • முதன்மை மேலாளர் ( Senior Manager-Trading In Interbank FX -Swap) – 1 

  • முதன்மை மேலாளர் (Senior Manager Trading/Arbitrage In FX-Currency Options) – 1

  • முதன்மை மேலாளர் (Senior Manager-Equity Dealer) – 1

  • முதன்மை மேலாளர்( Senior Manager-OIS Dealer) – 1 

  • மேலாளர் (Manager-Equity Dealer) – 1

  • மேலாளர் (Manager-NSLR Dealer) – 1 

  • தலைமை மேலாளர் (Chief Manager – Information Security) – 1

  • முதன்மை மேலாளர்( Senior Manager – Information Security) – 3 

  • மேலாளர் (Manager – Information Security) – 3

  • தலைமை மேலாளர் (Chief Manager – Cloud Infrastructure Specialist )– 2 

  • தலைமை மேலாளர் (Chief Manager – DBA )– 2

  • தலைமை மேலாளர் (Chief Manager – API Development) – 1

  •  Senior Manager – Kubernetes Specialist – 2

  • முதன்மை மேலாளர் (Senior Manager – Weblogic Administrator) – 1 

  • மேலாளார் (Manager – API Developer) – 2

  • முதன்மை மேலாளர் (Senior  Manager – DBA) – 3

  •  மேலாளர் (Manager – Network) – 1

  • மேலாளர் (Manager – Information Security) – 1 

  • தலைமை மேலாளர் (Chief Manager – Model Validator: Risk Validator) – 1

  • முதன்மை மேலாளர் (Senior Manager – IRRBB) – 1 

  • முதன்மை மேலாளர் (Senior Manager – Model Developer: Risk modelling) – 1 

  • முதன்மை மேலாளர் (Senior Manager – Data Analyst )– 1 

  • மேலாளர் (Manager – IRRBB)– 1

  • மேலாளர் (Manager – Climate Risk)– 1

  • மேலாளர் (Chief Manager- IT Risk) – 1 

  •  மேலாளர் (Chief Manager – EFRM Analyst )– 1

  • முதன்மை மேலாளர் ( Senior Manager – IT Risk )– 1

  • முதன்மை மேலாளர் (Senior Manager – EFRM Analyst)– 1 

  • மேலாளர் ( Manager – IT Risk) – 1 

  • மேலாளார் (Manager – EFRM Analyst) – 1

  • மேலாளார் (Manager – FRMC: Advance Fraud Examination) – 1


கல்வித் தகுதி


பொறியியல் துறையில் பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ., எம்.பி.ஏ., சி.ஏ, சி.எஃப்.ஏ.. ஐ.சி.டபுள்.யு.ஏ. முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது வரம்பு விவரம்


மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க 23 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்


இந்தப் பணியிடங்களுக்கு மாதம் ரூ.36,000 - 69,810 வழங்கப்படுகிறது.




தேர்வு செய்யப்படும் முறை:


கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்:


பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.175, மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.1000. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


https://www.indianbank.in -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.04.2024


வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை காண https://www.indianbank.in/wp-content/uploads/2024/03/Detailed-advertisment-for-Recruitment-of-Specialist-Officers-2024.pdf - என்ற இணைப்ப க்ளிக் செய்து காணவும்.