Indian Bank Apprenticeship: நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி வழங்கும் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை (31.07.2024) கடைசி தேதி ஆகும்.
Apprentices Act -ன் படி 2024 -2025ம் ஆண்டிற்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் எல்லா மாநிலங்களிலும் உள்ள இந்திய வங்கியில் தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.
மொத்த இடங்கள் - 1500
தமிழ்நாடு - 277
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 2020, மார்ச் 31ம் தேதிபடி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
www.nats.education.gov.in - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழிக்கான திறனறிவுத் தேர்வு ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்
ஊக்கத்தொகை:
மெட்ரோ மற்றும் நகரங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளை அலுவலகங்களில் - ரூ.15,000/-
கிராம புறங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளை அலுவலகங்களில் - ரூ.12,000/-
பயிற்சி காலம்:
ஒரு ஆண்டுகால தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. வங்கி விடுமுறை, அரசு விடுமுறை ஆகிய நாட்கள் தவிர மாதத்திற்கு ஒரு கேசுவல் லீவ் எடுக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் எனில் ரூ.500 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.07.2024
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய https://www.indianbank.in/wp-content/uploads/2024/07/Detailed-advertisement-for-Engagement-of-Apprentices-under-the-Apprentices-Act-1961.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.