India Post GDS Recruitment 2025: இந்திய அஞ்சல் துறையில் 21,413காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களுக்கானது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே 03-03-2025) கடைசி நாளாகும்.
10-ம் வகுப்பு தேர்ச்சி:
இந்தக் காலிபணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் கம்யூட்டர் உருவாக்கும் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுபவர்கள். பின்னர், அந்த மெரிட் லிஸ்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதனால் பத்தாம் வகுப்பு தேர்வில் 460 அல்லது 400-க்கு மேல் எடுத்திருந்தால், நிச்சயமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பணி விவரம்:
Gramin Dak Servaks -கிராமின் தாக் சேவக்
மொத்த காலியிடங்கள்: 21,413 பணியிடங்கள்
தமிழ்நாட்டில் மட்டும் 2,292 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுது என்ன?
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணபிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டு வேலை செய்த முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
www.indianpost.gov.in / https://indiapostgdsonline.gov.in/ - என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள், மகளிர், Transwomen ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
https://indiapostgdsonline.gov.in/reg_validation.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்னப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு விண்ணப்பிப்பதற்கு அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கமான https://indiapostgdsonline.gov.in/ref_validation.aspx -ற்கு சென்று அதில் கிடைக்கும் வழிகாட்டுதலை பின்பற்றினாலே போதும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.03.2025
முழு அறிவிப்பிற்காக லிங்க- https://indiapostgdsonline.cept.gov.in/Notifications1/Model_Notification.pdf
மண்டலங்கள் முறையே உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களுக்கு.. https://indiapostgdsonline.cept.gov.in/Notifications1/Final_Post_Consolidation.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.