India Post GDS Recruitment 2025: மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தபால் துறையில், நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
தபால் துறையில் 21,413 காலிப்பணியிடங்கள்:
இந்திய தபால் துறை கிராமின் அஞ்சல் துறை (GDS) பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), கிளை உதவி போஸ்ட் மாஸ்டர் (ABPM) மற்றும் அஞ்சல் சேவை (Dak Sevak) ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 21, 413 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான indiapostgdsonline.gov.in இல் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 03 ஆகும் . இருப்பினும், விண்ணப்பத்தில் திருத்தம் மார்ச் 06 முதல் 08 வரை செய்யப்படும்.
எந்தெந்த மாநிலங்களில் காலிப்பணியிடங்கள்:
தபால் துறை அறிவித்துள்ள காலிப்பணியியிடங்கள் ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, வடகிழக்கு, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளில் நிரப்பப்படும் என்பதை வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 3004 பணியிடங்களும், அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் 2,292 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
ஊதிய விவரம்:
பணிக்கு தேர்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பதவிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.
- போஸ்ட் மாஸ்டர் - ரூ.12,000/- முதல் ரூ.29,380/- வரை
- உதவி போஸ்ட் மாஸ்டர்/ டாக் சேவக் - ரூ.10,000/- முதல் ரூ.24,470 வரை
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும். கட்டணத்தை கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ST/பெண் விண்ணப்பதாரர்கள்/திருநங்கை விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை. மற்ற அனைவரும் 100 ரூபாயை விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
வயது வரம்பு:
போஸ்ட் மாஸ்டர். உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் டாக் சேவக் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தது 18 முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்:
- வேட்பாளர் இந்திய அரசு / மாநில அரசுகள் / இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
- விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரை உள்ளூர் மொழியைப் படித்திருக்க வேண்டும்.
- மாணவர்கள் கணினி அறிந்திருக்க வேண்டும்.
- சைக்கிள் ஓட்ட அறிந்திருக்க வேண்டும்
- போதுமான வாழ்வாதார வழிகள்
தேர்வு செய்யப்படும் வழிமுறைகள்:
- 2025 ஆம் ஆண்டுக்கான தகுதிப் பட்டியல்: இந்த ஆட்சேர்ப்புக்கு எந்தத் தேர்வும் இருக்காது. அமைப்பு உருவாக்கிய தகுதிப் பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். 10 ஆம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை, 4 தசமங்களின் துல்லியத்திற்கு சதவீதமாகத் தொகுக்கப்பட்ட தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
- ஆவண சரிபார்ப்பு: தகுதிப் பட்டியலில் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படுவார்கள்.
- மருத்துவ உடற்தகுதி தேர்வு: தேவைப்பட்டால், விண்ணப்பதாரர்கள் அடிப்படை மருத்துவ உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- அதிகாரப்பூர்வ இந்தியா போஸ்ட் ஜிடிஎஸ் போர்ட்டலைப் அணுகவும்: இந்தியா போஸ்ட் ஜிடிஎஸ் வலைத்தளத்தைக் கிளிக் செய்யவும்.
- பதிவு செய்யுங்கள்: 'பதிவு' தாவலைக் கிளிக் செய்து, பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்யுங்கள்.
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்: இப்போது, பதிவின் போது உருவாக்கப்பட்ட சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும். தனிப்பட்ட, கல்வி மற்றும் தொடர்பு விவரங்களை நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்: உங்கள் புகைப்படம், கையொப்பம் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துங்கள்: நீங்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்
- எதிர்கால குறிப்புக்காக உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கி சேமிக்கவும்.
India Post GDS Registration Link
முடிவுகள் எப்போது?
ஆட்சேர்ப்பு செயல்முறை முடிந்ததும் முடிவு அறிவிக்கப்படும். தேர்வு முடிவு தகுதிப் பட்டியலாக அறிவிக்கப்படும். சுமார் 7 முதல் 8 தகுதிப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும். ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.