India Bank Recruitment: நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் டிஜிட்டல் மார்கெட்டிங், அனல்டிக்ஸ், டிஜிட்டல் துறையில் உள்ள பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. சென்னையை தலமையிடமாக கொண்டு பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் வங்கிகளில் பணிபுரிய காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது.
சோசியல் மீடியா ஸ்பெசலிஸ்ட், Partnerships and Affiliates lead, Creative Expert, Data Engnieers, UI / UX designs ஆகிய பணிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
பணி விவரம்:
சோசியல் மீடியா ஸ்பெசலிஸ்ட் (Social Media Specialist)
Partnerships and Affiliates lead
Creative Expert
Data Engnieers
UI / UX designs
பணி இடம்:
இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் சென்னை அல்லது மாநிலங்களில் உள்ள மற்ற இந்தியன் வங்கி கிளைகளில் நியமிக்கப்படுவர்.
கல்வித் தகுதி:
சோசியல் மீடியா ஸ்பெசலிஸ்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஐ.டி., மீடியா, மார்கெட்டிங், தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட், கம்யூனிகேசன் துறைகளில் ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சோசியல் மீடியா மார்கெட்டிங் துறையில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Partnerships and Affiliates lead பணிக்கு மார்கெட்டிங், தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட், துறைகளில் ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Creatives expert மார்கெட்டிங், தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட், துறைகளில் ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Data engineers கம்யூட்டர் சிஸ்டம் சயின்ஸ், கணிதம், Econometrics, Statistics, Data Analytics அல்லது மற்ற பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
UI / UX டிசைனர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் அல்லது ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 30 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்குத் தகுதியானவர்களை நேர்காணல், குழு விவாதம் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் வங்கி இணையத்தளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்டு அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.indianbank.in/
விண்ணப்பம் கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம்:
Account Name : Engagement as Specialists in Digital Marketing, Analytics CoE
and Digitization on Contractual basis.
Account No : 7346887011
Bank & Branch : Indian Bank, Royapettah
Account Type : Current Account
IFSC Code : IDIB000R021
கவனிக்க..
விண்ணப்பதாரர்கள் தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரி இரண்டையும் செயலில் இருப்பதை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது.
நேர்காணல் உள்ளிட்ட தகவல்கள் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி ஒப்பந்தம் அடிப்படையிலானது மட்டுமே, மூன்றாண்டு காலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் திறன் அடிப்படையில் நிரந்தர வேலை வழங்கப்படும். மேலும், பணி நிரந்தரம், பணி இடம் ஆகியவற்றில் இந்தியன் வங்கி நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager (CDO), Indian Bank
Corporate Office, HRM Department, Recruitment Section
254-260, Avvai Shanmugham Salai,
Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 05.12.2022
12 நாட்கள் கேசுவல் லீவ், 15 நாட்கள் கூடுதல் விடுப்பு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அறிவிப்பின் https://www.indianbank.in/wp-content/uploads/2022/11/Detailed-Advertisement-for-Engagement-of-Specialists-in-Digital-Marketing-Analytics-CoE-and-DIGITIZATION-on-Contractual-basis.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.