சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள JRF வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Junior Research Fellow
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
- இதற்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ECE படித்திருக்க வேண்டும். சிக்னல் ப்ராசசிங் மற்றும் மெசின் லர்னிங் அல்காரிதம் ஆகியவற்றில் பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும்.
- GATE/ NET / UGC தேர்வு மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படும்.
- (Sheetal Kalyani )Department of Electrical Engineering துறையில் பணி செய்ய வேண்டும்.
வயது விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு ரூ.37,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/- என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.07.2024
இ-மெயில் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in
தொடர்புக்கு- 044- 2257 9796 9.00 AM முதல் 05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Junior%20Research%20Fellow-Advt-97-2024.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
தலைமை மேளாளர் பணி:
தலைமை மேலாளர் (Chief Manager – Finance & Accounts)
கல்வி மற்றும் பிற விவரம்:
- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க CA/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ. படிப்பு முடித்திருந்தால் கூடுதல் சிறப்பு. நிதி மற்றும் அக்கவுண்ட்ஸ் துறையில் எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும்.
- அரசு, மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட துறையில் 20 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். இந்தி மொழி தெரிந்திருத்தால் கூடுதல் சிறப்பு.
- இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 45 வயது நிரம்பியவர்களாகவும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்
ஊதிய விவரம்:
இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும். (மாதத்திற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/- என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இ-மெயில் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in
தொடர்புக்கு- 044- 2257 9796 9.00 AM முதல் 05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Chief%20Manager-Finance%20&%20Accounts-Advt-95-2024.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.07.2024