சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள முதன்மை மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


தலைமை மேலாளர் (Chief Manager – Finance & Accounts)


கல்வி மற்றும் பிற தகுதிகள்: 



  • ஐ.ஐ.டி.-யில் உள்ள IC&SR துறையில் (OFFICE OF INDUSTRIAL CONSULTANCY AND SPONSORED RESEARCH) காலியாக உள்ள தலைமை மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க  CA/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • எம்.பி.ஏ. படிப்பு முடித்திருந்தால் கூடுதல் சிறப்பு. நிதி மற்றும் அக்கவுண்ட்ஸ் துறையில் எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும். 

  • அரசு, மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட துறையில் 20 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  • ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். இந்தி மொழி தெரிந்திருத்தால் கூடுதல் சிறப்பு. 


வயது விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 45 வயது நிரம்பியவர்களாகவும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும். (மாதத்திற்கு ரூ.1.60 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.)


தெரிவு செய்யப்படும் முறை:


இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/- என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.07.2024


இ-மெயில் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in 


தொடர்புக்கு- 044- 2257 9796 9.00 AM முதல்  05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.


வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Chief%20Manager-Finance%20&%20Accounts-Advt-95-2024.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.