மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்துட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (Indian Institute of Information Technology, Design and Manufacturing) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


Research Associate – II (1 Position)


கல்வித் தகுதி 



  • "Integrated Clean Energy Material Acceleration Platform (IC-MAP)” என்ற ஆராய்ச்சி திட்டத்தில் பணி செய்ய பி.ஹெச்.டி. படித்திருக்க வேண்டும்.  இல்லையெனில் அதற்கு நிகரான படிப்பு இருக்க வேண்டும்.  M.E/M.Tech படித்திருக்க வேண்டும். ஆராய்ச்சி, கல்வி பயிற்றுவித்தல் டிசைன் மற்றும் டெவலப்மெண்ட் ஆகியவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.

  • எலக்ட்ரானிக் பொறியியல், இன்ஸ்ட்ருமென்டல் பொறியியல் துறையில் பி.ஹெச்டி தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தால் சிறப்பு.

  • 60% தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி பணிக்கு மாத ஊதியமாக ரூ.61,000 வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:


https://www.recruit.iiitdm.ac.in/Rec_con_2022/index.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.


மின்னஞ்சல் முகவரி -  recruit@iiitdm.ac.in


தொடர்பு எண்: 044-27476300/ 6313


அதிகாரப்பூர்வ வலைதள முகவரி - www.iiitdm.ac.in


அறிவிப்பின் முழு விவரத்தை http://old.iiitdm.ac.in/img/Recruitment/2024/Advt_Raja_ICMAP.pdf - என்ற லிங்கில் காணலாம். 


நேர்காணல் நடைபெறும் இடம்:


Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram
Melakkottaiyur, Off Vandalur-Kelambakkam Road,
Chennai-600127
Contact No: 044-27476393
Email: sricce@iiitdm.ac.in


விண்ணப்பிக்க கடைசி தேதி - 04.02.2024