பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 2100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் பற்றி காணலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (06.12.2023) கடைசி தேதி.

பணி விவரம் 

ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் (Junior Assitant Manager) - 800

Executives  Sales and Operation - 2100

மொத்த பணியிடங்கள் - 2100 (பணியிட எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கல்வித் தகுதி

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும்.

55% - 60% மதிப்பெண் பெற்ற்ரிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

இதற்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

பணி இடம்:

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாடு முழுவதும் உள்ள வங்கியின் அலுலகத்தில் நியமிக்கப்படுவர்.

ஊதிய விவரம்: 

இந்தப் பணிகளுக்கு ஊதியமாக வேலைக்குச் சேர்ந்தவுடன் முதலாமாண்டு ரூ.29,000/- இரண்டாம் ஆண்டு ரூ.31,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

இந்த தேர்விற்கு இந்தி, மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் தேர்வு எழுதலாம்.

விண்ணப்பிக்கும்  முறை: 

இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.idbibank.in/- என்ற லிங்கி கிள்க் செய்யவும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 

முக்கிய தேதிகள்:

ஆன்லைன் தேர்வு உத்தேசிக்கப்பட்ட நடைபெறும் நாள்

Junior Assistant Manager (JAM), Grade ‘O’- 31.12.2023

Executives – Sales and Operations (ESO) - 30.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி - 06.12.2023

மேலும் கூடுதல் விவரங்களுக்கு.. https://www.idbibank.in/pdf/careers/Detailed_-Advertisement.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் வேலை செய்ய வாய்ப்பு

மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் (Navodaya Vidyalaya Samiti School) காலியாக உள்ள பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி விவரம்

துணை ஆணையர் ( Deputy Commisioner - Finance)

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதய வித்யாலயா சமிதி பள்ளியில் Deputation முறையில் பணிசெய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுகிறது. நிதி துறையில் துணை ஆணையர் பணியிடம் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது. 

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய / மாநில / Statuary / Autonomous நிறுவனங்களில் Pay Level -12 ல் ஊதியம் வாங்குபவர்கள், 5 ஆண்டுகள் 11- லெவல் ஊதியம் வாங்குபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

15,டிசம்பர், 2023-ன் படி, விண்ணப்பத்தாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

பணி காலம்

இது மூன்றாண்டு கால பணியாகும். (தேவையெனில்)

ஊதிய விவரம்

இதற்கு மாத ஊதியமாக ரூ.78,800- ரூ. 2,09,200 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். இ-மெயில் மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.12.2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

Deputy Commissioner Admin,Navodaya Vidyalaya Samiti,B-15,Institutional Area, Sector-62,NoidaGautam Budh Nagar (U.P.) - 201309

இ-மெயில் முகவரி - applications.nvs@gmail.com

இந்த வேலைவாய்ப்பு குறித்து முழு விவரங்களுக்கு https://navodaya.gov.in/nvs/en/Recruitment/Notification-Vacancies/# - என்ற இணைப்பி க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.