இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (Indian Council of Medical Research) தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICMR- National Institute of Cancer Prevention and Research) காசநோய் ஏற்படுவதை குறைப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வு செயல் விளக்கத் திட்டத்தில் பணியாற்ற விரும்புவோர் நாளைக்குள் விண்னப்பிக்கலாம்.
திட்ட விவரம்:
இந்த அறிவிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் A Demonstration project for reductionm of TB in India - A multicentric (Mega TB Elimination Project) என்ற திட்டதில் பணியாற்ற வேண்டும்.
- Project Junior Medical Officer
- Project Health Assistant
- Project Field Assistant
- Project X-ray Technician
கல்வித் தகுதி:
- Project Junior Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகார பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து மருத்துவம் படித்திருக்க வேண்டும். எக்ஸ்ரே-வின் விளக்கம் அளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Project Health Assistant பணிக்கு விண்ணப்பிக்க அறிவியல் பாடத்தில் பள்ளிப் படிப்பு, ஐ.டி.ஐ . தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது நல்லது.
- Project Field Assistant பணிக்கு அறிவியல் பாடத்தில் பள்ளிப் படிப்பு, சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை படிப்பு முடித்திருக்க வேண்டும். இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- Project X-ray Technician -னுக்கு 12 - ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். radiology/radiography துறையில் இரண்டு ஆண்டுகால டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
மெடிக்கல் ஆஃபிசர் மற்றும் எக்ஸ்-ரே டெக்னீசியன் திட்டத்திற்கு 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்றவைகளுக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- Project Junior Medical Officer- ரூ.60,000
Project Health Assistant -ரூ.17,000
Project Field Assistant- ரூ.17,000
Project X-ray Technician -ரூ.18,000
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://nicpr.icmr.org.in/ -என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க http://14.139.224.12/nicprform/- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 02.01.2023
இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://nicpr.icmr.org.in/images/ProjectJunior_Advt_12_12_22.pdf-என்ற லிங்கில் காணலாம்.
இது தற்காலிகமான வாய்ப்பு மட்டுமே. செயல்திட்ட உதவியாளராக பணியாற்ற வாய்ப்பு; திட்டம் முடிவடையும் வரையில் பணியாற்றலாம்.
இதையும் படிங்க..