வங்கிப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய ஆண்டுதோறும் ஐபிபிஎஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இதன்மூலமே நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு அதிகாரிகளும் உதவியாளர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

Continues below advertisement

2025ஆம் ஆண்டுக்கான தேர்வு 13217 காலி இடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ளது. நவம்பர் அல்லது டிசம்பரில் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 21 கடைசித் தேதி ஆகும். 

என்னென்ன பணி இடங்கள்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சேலத்தைத் தலைமை இடமாகக் கொண்ட தமிழ்நாடு கிராம வங்கிக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இதை எழுத தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

Continues below advertisement

தமிழ்நாடு கிராம வங்கி காலியிட விவரங்கள்

  1. அலுவலக உதவியாளர்கள் (பல்நோக்கு) - 468 பதவிகள்
  2. அதிகாரி நிலை I - 200 பதவிகள்
  3. அதிகாரி நிலைII (IT) - 12 பதவிகள்
  4. அதிகாரி நிலை II (CA) - 02 பதவிகள்
  5. அதிகாரி அளவுகோல் II (சந்தைப்படுத்தல் அதிகாரி (MO)) - 04 பதவிகள்
  6. அதிகாரி அளவுகோல் II (வேளாண் அதிகாரி) - 02 பதவிகள்

இதில் ஒவ்வொரு பணி இடத்துக்கும் ஒவ்வொரு விதமான கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வயது வரம்பும் குறைந்தபட்சம் 18 ஆகவும் சில பணி இடங்களுக்கு 21 ஆகவும் உள்ளது.

தமிழகத்தில் தேர்வு மையம் எங்கே?

முதற்கட்ட தேர்வு மையம்:

சென்னை, கோவை, கடலூர், தரம்புரி, திண்டுக்கல் ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விருதுநகர்

முதன்மை தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, வேலூர்

தேர்வு எப்போது?

முதல்நிலைத் தேர்வு நவம்பர் அல்லது டிசம்பரில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு டிசம்பர் 2025 அல்லது பிப்ரவரி 2026-ல் நடைபெற உள்ளது.

நேர்காணல் 2026 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடைபெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

  1. முதற்கட்ட தேர்வு
  2. முதன்மைத் தேர்வு,
  3. நேர்காணல் (அதிகாரிகளுக்கான பணியிடங்களுக்கு மட்டும்)

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/-

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-

கட்டண முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://ibpsreg.ibps.in/rrbxivscag25/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு செப்டம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தையும் அந்த நாளிலேயே செலுத்த வேண்டும்.

https://www.ibps.in/index.php/rural-bank-xiv/ என்ற இணைப்பில் காலி இடங்களுக்கான அறிவிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.