இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 19.09.2025 நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகமான இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 19.09.2025 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.
கல்வித்தகுதி
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பி.இ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 19.09.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில் எண்.9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து கலந்து கொள்ளலாம்.
தனியார் வேலைவாய்ப்பு போர்டலில் பதிவு செய்ய வேண்டும்
இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூர் தனியார்துறை நிறுவனங்கள் உரிய ஆவணங்களான பான்கார்டு, ஜி.எஸ்.டி. சான்றிதழ், நிறுவன சான்றிதழ். உத்யோக் ஆதார் ஆகிவற்றுடன் இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது நிறுவனத்தை தனியார் வேலைவாய்ப்பு போர்டலில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ranipetjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்