பல்வேறு வங்கிகளில் உள்ள உதவி அலுவலர் காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை ’Institute of Banking Personnel Selection’ என்றழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணபிக்க கால அவசாகம் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.




இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இறுதிநாள் வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


உதவி அலுவலர் ( CRP Clerks- XIV)


மொத்த பணியிடங்கள்: 6,128


’COMMON RECRUITMENT PROCESS’-ல் பங்கேற்கும் வங்கிகளின் விவரம்:


பேங்க ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யு.சி.ஓ. வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா,பஞ்சாப் நேசனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் அன்ட் சிந்த் வங்கி ஆகிய வங்கிகளுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


கல்வித் தகுதி:



  • இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

  • உள்ளூர் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை:


இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்கள் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


முதல்நிலை தேர்வு பாடத்திட்டம்





முதன்மை தேர்வு



 


விண்ணப்ப கட்டணம்:





எப்படி விண்ணப்பிப்பது?


இதற்கு https://cgrs.ibps.in/ -/ https://www.ibps.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் அப்டேட்களை காணவும்.


முக்கிய நாட்கள்:




 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.07.2024


 மொத்தப் பணியிடங்கள்,  எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பான முழு விவரத்தை https://www.ibps.in/wp-content/uploads/CRP_Clerks_XIV_Final_Notification_28.6.24.pdf -  என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.