சென்னை மெட்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


சென்னை மெட்ரோ நிறுவனத்தில் General Manager (Signalling & Telecom), general manager ( operation) போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 14 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் என்னென்ன தகுதிகள் கொண்டிருக்க வேண்டும்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.



சென்னை மெட்ரோ நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்:


General Manager (Signalling & Telecom) பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் – 1


 கல்வித் தகுதி :


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.E /B.Tech in ECE or Electronics or Communication Engineering. மற்றும் 20 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும் பெற்றவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 45 வயது முதல் 55 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


சம்பளம் : மாதந்தோறும் ரூ. 2,25,000 என நிர்ணயம்.


General Manager (Operations) பணிக்கானத் தகுதிகள்


கல்வித் தகுதி :


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் MBA படித்திருக்க வேண்டும். மேலும் 20 ஆண்டுகள் பணி முன்அனுபவம் பெற்றிருப்பது அவசியம்


வயது வரம்பு : 45 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம் :  மாதந்தோறும் ரூ. 2,25,000


Chief Vigilance Officer பணிக்கானத் தகுதிகள்:


கல்வித் தகுதி :


ஏற்கனவே பணியில் உள்ள குரூப் 1 நிலை அதிகாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:  விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


இதேப்போன்று General Manager (Electrical), General Manager (Human Resources), General Manager (Planning & Business Development), Additional General Manager (Underground Construction), Additional General Manager (IT & AFC), Joint General Manager (Underground Construction), Joint General Manager (Architecture), Deputy General Manager (Marketing), Deputy Manager (Transport Planning) போன்ற பணியிடங்களும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், முதலில் தங்களது சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், தேவையான அனைத்து ஆவணங்களை வைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:


JOINT GENERAL MANAGER (HR) CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT,


 ADMIN BUILDING,


POONAMALLEE HIGH ROAD,


KOYAMBEDU,


CHENNAI – 600 107.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – மே 14, 2022


விண்ணப்பக்கட்டணம் – பொதுப்பிரிவினக்கு ரூ. 300ம், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ. 50 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவத்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-06-2022-Website-Final-1.pdf  என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.