பேங்க் ஆப் பரோடா வங்கியில் இந்தியா முழுவதும் Correspondent Supervisors, Financial Literacy & credit counsellor ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


இந்தியாவில் பரோடாவை தலைமையிடமாக்கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கி தான் பாங்க் ஆப் பரோடா. இந்தியா முழுவதும் 3082 கிளைகள் உள்பட தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் பாங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் பாங்க் ஆப் பரோடா வங்கியில் தற்போது Correspondent Supervisors, Financial Literacy & credit counsellor பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்ன தகுதிகள் உள்ளது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.


பேங்க் ஆப் ஃபரோடா வங்கியில் பணி:


பேங்க் ஆப் பரோடா வங்கியில் Correspondent Supervisors, Financial Literacy & credit counsellor பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


இப்பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை வங்கியின் அதிகார்ப்பூர்வ  இணையப்பக்கத்திலிருந்து டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள பெயர், கல்வித்தகுதி, முன் அனுபவம், நிரந்தர முகவரி என அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். இதோடு விண்ணப்பத்தில் விண்ணப்பத்தாரரின் புகைப்படத்தினை பாங்க் ஆப் பரோடாவின் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 


பாங்க் ஆப் பரோடா வங்கியின் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என வேலை வாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும், அதில் தேர்வாகும் தகுதியுள்ள நபர்கள் Correspondent Supervisors, Financial Literacy & credit counsellor ஆக நியமிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


எனவே வங்கிகளில் பணிபுரிய விரும்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தது இளங்கலை பட்டம் பெற்றிருப்பதோடு, கணினியை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரம் Msc (IT), BE (IT), MCA, MBA படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டதாரிகள் உடனடியாக இப்பணிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறும் வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இப்பணித்தொடர்பான மேற்கண்ட விபரங்களை https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-Puducherry.pdf என்ற இணையதளப்பகத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.