வேலை தேடுவோர்களின் கவனத்திற்கு.. இம்மாத அடுத்த வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய அரசு, தனியார் பணி குறித்த முழு விவரங்களை இக்கட்டுரையில் காணலாம். விண்ணப்பிக்க மறந்துடாதீங்க..


EMRS Recruitment 2023


பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா  மாதிரி உறைவிட பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியிட விவரம்:



  • பள்ளி முதல்வர் -303 

  • முதுநிலை பட்டதாரி ஆசிரியர் - 2266 

  • கணக்கர் -361 

  • இளநிலை உதவியாளர் (தலைமையகம்)- 759 

  • ஆய்வக உதவியாளர்- 373 


விண்ணப்பிப்பது எப்படி?


www.emrs.tribal.gov.in-என்ற இணையதள பக்கத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி தேதி -31.07.2023


*****


UPSC Recruitment 2023


மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC – Union Public Service Commission)  மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 261 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள Air Worthiness Officer, Livestock Officer உள்ளிட்ட பல்வேறு  பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலங்களில் பணியமர்த்தப்படுவர். மத்திய ஆயுஷ் அமைச்சகம், விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

 

இதற்கு யு.பி.எஸ்.சி..-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

 

ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php - என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 

https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MzQ5O2A7IMDADICAXCZC6SYHNSIQAKVGNLIC31XKAWXLCQKFJ5XA9P என்ற இணைப்பை க்ளிக் செய்து கூடுதல் விவரங்களை காணலாம்.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி -31.07.2023

 

*******

NPCIL Apprentice Recruitment:

 

மத்திய அமைச்சக்த்தின் கீழ் செயல்பட்டு வரும் கூடங்குளம் அணு சக்தி கார்ப்ரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு (டிரேடு அப்ரண்டிஸ்கள்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.


விண்ணப்பிப்பது எப்படி?


www.npcil.nic.in - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 


தேவையான சான்றிதழ் உடன் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி -31.07.2023


இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_30062023_01.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


*******


CSIR Karaikudi Recruitment:







மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Electrochemical Research Institute – CECRI) காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 

பணி விவரம்

விஞ்ஞானி 


பணியிடம் - காரைக்குடி




விண்ணப்பிப்பத்து எப்படி?


https://www.cecri.res.in. - என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணபிக்க கடைசி தேதி - 31.07.2023


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://scitarecruit.cecri.res.in/Advt/Advt_02_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


********


TNHRNCE Recruitment:


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையுல் உள்ள புரசைவாக்கம் வட்டத்தில் வ.ஊ.சி.நகரில் உள்ள ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தில்  திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அனுவார், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


மருத்துவ அலுவலர் (Medical Officer )









பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள்(Multi Purpose hospital worker/ Attender)


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


செயல் அலுவலர்,


ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம்


பூங்கா நகர்.


சென்னை-3


விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.07.2023


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1fWgYRoctapfszjsA9ShtVWLzYbt-oRtN/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.