மதுரை மாவட்டத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட நலவாழ்வு மையங்களில் உள்ள பல்வேறு  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.


பணி விவரம்


மருத்துவ அலுவலர்கள் - 46


பல்நோக்கு சுகாதார பணியாளர் - 46


பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் - 46


மொத்த பணியிடங்கள் : 138


கல்வித் தகுதி: 


மருத்துவ அலுவலர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இளங்கலை மருத்துவப் படிப்பு முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும். 


பல்நோக்கு சுகாதார பணியாளர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தை படித்திருக்க வேண்டும்.


பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப்பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட பல்நோக்கு சுகாதார  பணியாளார் சுகாதார ஆய்வாளர் துப்புர ஆய்வாளர் பணி அனுபவம் இருக்க வேண்டும்.


பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். உடற்தகுதி சான்றிதழ் வழங்க வேண்டும். 


வயது வரம்பு: 


மருத்துவ அலுவலர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்ற இரண்டு பணியிடத்திற்கும் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


விண்ணப்பிப்பது எப்படி? 


தேவையான ஆவணங்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 


அனுப்பும்போது, ‘ மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு’ என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.


இணைக்க வேண்டிய சான்றிதழ் நகல்கள்


பிறப்புச் சான்றிதழ்


முன் அனுபவச் சான்றிதழ்


கொரோனா கால களப்பணி முன் அனுபவ சான்றிதழ்


கவனிக்க


இது தற்காலிக பணி மட்டுமே..


பணிக்காலம் 11 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.


எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட்டமாட்டாது.


பணியிடல் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட வேண்டும்.


தொடர்புக்கு..


dhscontappt@gamil.com


விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.02.2023


இது தொடர்பான முழு விவரத்திற்கு https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/02/2023020353.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி - 


செயற் செயலாளர், 
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
மதுரை - 625 014