இலவச பயிற்சி:


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்(sc/st) சமூகத்தை சார்ந்தவர்களுக்கு, மாதாந்திர ரூ. 1000 ஊக்கத் தொகையுடன் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளதாக NATIONAL CAREER SERVICE CENTRE அறிவித்துள்ளது. அரசு பணியில் பணிபுரிய விரும்புவோர் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.


விண்ணப்பிக்கவும்:


தேசிய வாழ்வாதார சேவை மையம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு  ஊக்கத்தொகையுடன் இலவசமாக பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியானது வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பயிற்சிக்கு வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயிற்சியானது சிறந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரம்பு:


இந்த பயிற்சிக்கு ஏதேனும் ஒரு கல்லூரிகளில் பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.






நோக்கம்:


இப்பயிற்சியானது TNPSC உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துதல் நோக்கில் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியானது சென்னை மற்றும் புதுச்சேரியில் பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளானது மாலை தினமும் 2 மணி நேரம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


கூடுதல் விபரங்கள்:


மேலும் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள NCS|Home: National Career Service - Career guidance and Jobs in India and related servicesமற்றும் Home | Ministry of Labour & Employment | GoI வலைதளங்களை பார்க்கவும்.


Also Read:Jobs: இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் வேலையை கைவிடும் 86% ஊழியர்கள் - அதிர்ச்சியளித்த ஆய்வறிக்கை


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண