பிரமாண்டமாக வளர்ந்திருக்கும் கூகுள் உலகிலேயே மிகவும் பிரபலமான இணையத்தில் பல சாதனைகளைப் படைத்த நிறுவனம். தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருள்கள் என இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது கூகுள். கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு தொடங்கிய கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. உலகிலேயே மிகவும் சிறப்பான பணிச்சூழல் உள்ளதாகக் கருதப்படும் நிறுவனங்களில் ஒன்று கூகுள். அதன் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் கேட்டே நாம் வாய் பிளந்திருப்போம். அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாடுகளுக்கான அலுவலகங்கள் வைத்துள்ளனர்.


அதில் வேலை செய்பவர்களை அந்த நாடுகளில் இருந்தே வேலைக்கு எடுப்பது வழக்கும். தற்போது அந்த நிறுவனத்தில் பணிபுரிய காலிப்பணியிடங்களை உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கான இடங்களாக ஹைதராபாத் மற்றும் பெங்களூரு என அறிவிக்கப்பட்டுள்ளது.



கூகுள் நிறுவனத்தில் மென்பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. பொறியியல் படித்த பெரும்பாலானோரின் கனவு உலகளாவிய நிறுவனங்களில் வேலை பார்ப்பது. அதிலும் முக்கியமானது கூகுள் நிறுவனம். அத்தகைய கனவை நனவாக்க அரிய வாய்ப்பு தற்போது கிடைக்கின்றது. உடனே விண்ணப்பித்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


மிகவும் பிரபலமான, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தில் மென்பொறியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பொறியியல் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்கள் இந்தியாவில் உள்ள கூகுள் அலுவலங்கள் ஆன ஹைதராபாத், பெங்களூரு ஆகிய பகுதிகளில் நிரப்பப்பட உள்ளன.



பதவி: மென்பொறியாளர் (Software Engineer)


கல்வித் தகுதி: 2019/2020/2021 ஆகிய ஆண்டுகளில் B.E/B.Tech/M.E/M.Tech ஆகிய படிப்புகள் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


பணி காலியாக உள்ள இடம்: ஹைதராபாத் மற்றும் பெங்களூரு


அனுபவம்: அனுபவமற்ற புதியவர்களைதான் வேலைக்கு எடுக்கிறது நிறுவனம். இருப்பினும், 0-1 வருடங்கள் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


யார் யார் விண்ணப்பிக்கலாம்?


பொறியியல் டிகிரிகளில் சாப்ட்வேர் படிப்புகளில் திறன் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். C, C++, JAVA, Linux, Python, OS, Machine Learning போன்ற சாப்ட்வேர் விவரங்கள் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


எப்படி விண்ணப்பிக்கலாம்?


இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளப் பக்கம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


https://careers.google.com/jobs/results/132239628489892550-software-engineer-university-graduate-2022-start/