ராமநாதபும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்ட (Ex Serviceman Contributory Health scheme - ECHS) மருத்துவமனையில் மருத்துவர் முதல் உதவியாளர் வரையிலான பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
மருத்துவ அதிகாரி
பல் மருத்துவர்
செவிலியர் உதவியாளர்
மருந்தாளுனர்
உதவியாளார் பெண்
ஓட்டுநர்
சுகாதார பணியாளர்
கல்வித் தகுதி:
- மருத்துவ அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- பல் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க BDS படிப்பி தேர்ச்சி பெற்று ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க GNM டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- மருந்தாளுநர் பணிக்கு விண்ணப்பிக்க B.pharm படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற முறையில் படித்திருக்க வேண்டும். அதோடு பள்ளிப் படிப்பில் அறிவியல் பாடம் படித்திருக்க வேண்டும். மூன்று ஆண்கள் பணி அனுபவம் இருக வேண்டும்.
- உதவியளர், சுகாதார பணியாளர் பணிக்கு ஏதாவது துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
- மருத்துவ அதிகாரி- ரூ. 75,000/-
- பல் மருத்துவர் -ரூ. 75,000
- செவிலியர் உதவியாளர் - ரூ. 28,100
- மருந்தாளுனர்- ரூ. 28,100/-
- உதவியாளார் பெண் - ரூ.16,800/-
- ஓட்டுநர் - ரூ.19,00/-
- சுகாதார பணியாளர் - ரூ.16,800
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://echs.gov.in/- என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
OIC, Station HQ, (ECHS Cell),
INS Parundhu, Utchipuli,
Ramanathapuram - 623534
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.04.2024
மேலும் விவரங்களுக்கு https://www.echs.gov.in/assets/advertisement/Coimbatore%20Purandu%20Apr%2024.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.