தொழில்முனைவோர்‌ - யூடியூப்‌ சேனலை எவ்வாறு உருவாக்குதல்‌ மற்றும்‌ பொருட்களை சந்தைப்படுத்தல்‌ தொடர்பாக 3 நாட்கள் பயிற்சி அரசு சார்பில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வது எப்படி என்று பார்க்கலாம்.


தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌ சென்னையில்‌ "யூடியூப்‌ சேனலை எவ்வாறு உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது வரும்‌ 09.01.2025 முதல்‌ 11.01.2025 வரை மூன்று நாட்கள்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரையில்‌ மாவட்டத்‌ தொழில்‌ மையம்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌, விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ நடைபெற உள்ளது.


"சொந்தமாக யூடியூப் சேனலை உருவாக்குதல்‌, வீடியோ மற்றும்‌ ஸ்லைடு ஷோ உருவாக்கம்‌, சமூக ஊடக சந்தைப்படுத்தல்‌, சமூக ஊடகங்களை இணைத்தல்‌, வாடிக்கையாளர்‌ வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல்‌ மற்றும்‌ ஊக்குவிப்பு - ஆன்லைன்‌ மார்க்கெட்டிங்‌ - டொமைன்‌ பெயர்‌ & ஹோஸ்டிங்‌ - இணையதள வடிவமைப்பு நுட்பங்கள்‌,சைபர்‌ குற்றம்‌ பாலிசி மற்றும்‌ விதிகள்‌ ஆகிய தலைப்புகளின்‌ கீழ்‌ உள்ளடக்கப்பட்டுள்ளன..


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


ஆர்வமுள்ளவர்கள்‌ ஆண்‌, பெண்‌ மற்றும்‌ திருநங்கைகள்‌ 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்‌ச கல்வித்‌ தகுதியாக 10ம்‌ வகுப்பு தேர்ச்சிப்‌ பெற்றவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌.


மேலும்‌, இந்த பயிற்சி‌ பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர்‌ ஙா. என்ற வலைத்தளத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌. அலுவலக வேலை நாட்களில்‌ திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்‌. முகவரி தொலைபேசி / கைப்பேசி எண்கள்‌ கொடுக்கப்பட்டுள்ளன.


Training Venue


District Programme Manager


District Industrial Centre Conference Hall,


Villupuram District.


90801 30299


Entrepreneurship Development and_ Innovation Institute, Guindy, Chennai - 600 032


9841693060, 9080609808,


முன்பதிவு அவசியம்‌


பயிற்சியின்‌ முடிவில்‌ அரசு சான்றிதழ்‌ வழங்கப்படும்‌.