EMRS Recruitment 2023:  பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலவ்யா  மாதிரி உறைவிட பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், விடுதி பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிட விவரம்:

ஆசிரியர்கள்

  • இந்தி - 606
  • ஆங்கிலம் - 671
  • கணிதம் - 686
  • சமூக அறிவியல் - 670
  • மூன்றாவது மொழி - 652
  • இசை - 320
  • கலை -342 
  • உடற்கல்வி - 321
  • உடற்கல்வி பெண் - 345
  • நூலகர் - 369
  • விடுதி காப்பாளர் -335 (ஆண்)
  • விடுதி காப்பாளர் பெண் - 334


மொத்த பணியிடங்கள் - 6,329

ஊதிய விவரம்:

  • TGT - லெவல் 7 ரூ.44,900- 1,42,400
  • TGT - Miscellanrous - லெவல் 6 ரூ.35,400 - 1,12,400
  • விடுதி காப்பாளர் - லெவல் 5 ரூ.29,200 - 92,300

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

PGT - ஆசிரியர்கள் பணிக்கு ஆங்கிலம், இந்தி, கணிதம், ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் 

 ரூ- 2000/- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ரூ. 1500/- ஆசிரியர் அல்லாத இதர அனைத்து பதவிகளுக்கும் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும், 

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?  

www.emrs.tribal.gov.in -என்ற இணையதள பக்கத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏகல்வ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளி:

பழங்குடியின மாணவர்களுக்காக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குடியிருப்புப் பள்ளிகளை அமைப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 275 (1)-ன் கீழ் மத்திய அரசு நிதியை வெளியிட்டு வருகிறது.

2018-19ம் ஆண்டு இதற்கென தனித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 50 சதவீதத்திற்கு மேல் பழங்குடியின மக்கள் தொகை உள்ள வட்டங்களிலும், அல்லது குறைந்தபட்சம் 20 ஆயிரம் பழங்குடியினர் உள்ள ஒவ்வொரு வட்டத்திற்கும் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 நாடு முழுவதும் 740 வட்டங்கள் கண்டறியப்பட்டன. தற்போது வரை, நாடு முழுவதும் 394 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 1,05,463 பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.08.2023 


இது குறித்து கூடுதல் தகவல்களை -- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

*****

2023-2024 ஆம் ஆண்டிற்கு குமிழி ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிக்கு தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமனம்

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி ( Eklavya Model Residential Higher Secondary School )

செங்கல்பட்டு ( Chengalpattu Jobs ) : செங்கல்பட்டு மாவட்டம் வண்டலுார் வட்டம் குமிழி ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளியில் ( Eklavya Model Residential Higher Secondary School )  கீழே குறிப்பிட்டுள்ள காலியாக உள்ள பட்டதாரி/ முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி காப்பாளர்  காலிப்பணியிடங்களுக்கு  பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வரிசை எண்

பதவி

பாடம்

கல்வி தகுதி

காலிப்பணியிட

விவரம்

1

முதுகலை பட்டதாரி ஆசிரியர்

வேதியியல்

MSC   BEd

01

விலங்கியல்

MSC   BEd

01

ஆங்கிலம்

MA    BEd

01

2.

பட்டதாரி ஆசிரியர்

கணிதம்

BSC  BEd

01

3.

காப்பாளர்

Any Subject

Any Degree  with B Ed

01

விதிமுறைகள் என்னென்ன ?

  1. இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவதால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்.ரூ.15,000/- முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்.ரூ.18,000/- மற்றும் காப்பாளர்களுக்கு மாதம்.ரூ.12,000/- வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
  2. இந்நியமனங்கள் முற்றிலும் தற்காலிகமானது புதியதாக நியமிக்கப்படம் பணி என்பதால்  இந்த கல்வியாண்டு 2023-2024 அல்லது பள்ளியின் கடைசி வேலை நாள் வரை மட்டுமே பணியில் தொடரமுடியும்.
  3. மேற்படி காலிப்பணியிடங்களுக்கு பழங்குடியினர் இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியான பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் இல்லாதபட்சத்தில், பட்டியல் இனத்தவர்களும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் விண்ணப்பதாரர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறைகள்

மேற்கண்ட தற்காலிக பணிக்கான விண்ணப்பங்கள் 10.08.2023 முதல் 17.08.2023 அன்று மாலை 5.00 வரையிலும் கீழ்கண்ட முகவரில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.