சமூகத்தில் முன்னேறத்துடிக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்காகவே சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தவறாமல் அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.


எத்தனை தடைகள் வந்தாலும், கை,கால் ஊனம் போன்ற பல மாற்றுத்திறனுடன் பிறந்திருந்தாலும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதோடு தன் சொந்த சம்பாதியத்தில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பலர் காத்திருக்கும் நிலையில், அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம்  சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. எனவே இதுக்குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு குறித்து விரிவாக இங்கு தெரிந்துக்கொள்வோம்.


.மத்திய அரசின் கீழ் செயல்படும் சென்னை கிண்டியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாட்டு சேவை மையம் (NCSC-DA) சார்பில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,  நேற்று  மாற்றுத் திறனாளிகள், சுயதொழில் மூலம் வாழ்க்கை மேம்பாடு அடைவதற்கு உதவியாக, “சுயதொழில் வங்கி கடன் பரிந்துரை முகாம் நடைபெற்றது.  இந்நிலையில் தான்  நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.



மேலும்  இது தொடர்பாக தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கை மேற்பாட்டு சேவை மையத்தின் இணை இயக்குநர் (பொறுப்பு) சங்கீதா பற்குணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான  தேசிய மேம்பாட்டு மையம் சார்பில் நாளை அதாவது மார்ச் 12 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாகவும் ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிக்கையில் தெரிவிக்கபபட்டுள்ளது. இதோ இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக என்னென்னத் தகுதிகள்? நேரம் போன்றவை குறித்து இங்கு விரிவாகத் தெரிந்துக்கொள்ளுங்கள்.


மாற்றுத்திறனாளிகளுக்கான  வேலைவாய்ப்பு முகாம் குறித்த விபரங்கள்:


கல்வித்தகுதி – பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.


வயது வரம்பு – மேற்கண்ட தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ளலாம்.


நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை


இடம் – சென்னை கிண்டி மாற்றுத்திறனாளிகள் சேவை மையம்.


இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 15 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது.


நாளை நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, சுய விவகரம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் வந்து பங்கேற்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முற்றிலும் தகுதியின் அடிப்படையில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே தவறாமல் வாழ்வில் தன்கையால் உழைக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறுமாறு மாற்றுத்திறனாளிகள் மாநில இணை இயக்குநர் அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளார்.