பெங்களூரில் செயல்பட்டுவரும் பெல் நிறுவனத்தில் 360  அப்ரன்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமுள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகள் உடனடியாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.


BHEL ஆனது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளான இது மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்தியாவில் போபால், அரித்வார், ஐதராபாத், சான்சி, திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை , பெங்களூர்ஆகிய ஊர்கள் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் செயல்பட்டுவரும் நிலையில் இதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் அமைந்துள்ளது.


குறிப்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மின்னாக்கி நிலையங்களை அமைப்பதற்கு ஏதுவாக நான்கு வணிகக் கோட்டங்கள் (POWER SECTORS) உருவாக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு இயக்கங்களுக்காக தனிப்பிரிவும் இந்நிறுவனத்தில் உள்ளது. பெல் நிறுவனத்தில் அவ்வப்போது பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகக்கூடும். குறிப்பாக அப்ரண்டிஸ் ஆவதற்கான வாய்ப்பு தான் அதிகளவில் வெளியாகும். இந்நிலையில் தற்போது பெங்களூரில் பெல் நிறுவனத்தில் 360 அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கு விண்ணப்பிக்க என்னென்னத் தகுதிகள் தேவை? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.





பெங்களூர் பெல் நிறுவன காலிப்பணியிட விபரங்கள்:


டெக்னிக்கல் பிரிவில் காலிப்பணியிட விபரம்:


கம்யூட்டர் சயின்ஸ்– 25


எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் – 50


மெக்கானிக்கல் – 25


கிராஜூவேட் பிரிவில் காலிப்பணியிட விபரம்:


கம்யூட்டர் சயின்ஸ் – 75


எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் – 125


மெக்கானிக்கல் – 50


எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் -10


கல்வித்தகுதி:


மேற்கண்ட பிரிவுகளில் அப்ரண்டிஸ் பணிக்கு  விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


http://portal.mhrdnats.gov.in/ என்ற இணையதளப்பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.


பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் எவ்வித தவறும் இல்லாமல் நிரப்ப வேண்டும்.


முன்னதாக கல்விச்சான்றிதழ், புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.


இதனையடுத்து நிரப்பிய விண்ணப்பத்தை நாளைக்குள் அதாவது மார்ச் 10  ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உதவித்தொகை – மாதம் ரூபாய் 11,110 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


எனவே இன்ஜினிரிங் முடித்து வேலைதேடும் இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.  மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, http://portal.mhrdnats.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.