மத்திய பணியாளர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation) சென்னை அலுவலகத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு வரும் திங்கட்கிழமை (29.01.2024) நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
பணி விவரம்
Child Psychologist
கல்வி மற்றும் பிற தகுதி
- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Psychology with M. Phil in Clinical Psychology ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- குழந்தை மற்றும் பதின்பருவ வயதுடையவர்களுக்கு ஆலோசனை வழங்கிய இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- இதற்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
ரூ.47,838 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பழங்குடியின / பட்டியலின பிரிவினர், மகளிர் ஆகியோருக்கு விண்ணப்பம் கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் நடைபெறும் இடம்:
ESIC Medical College & Hospital,
Ashok Pillar Road, K.K.
Nagar, Chennai
தொடர்புக்கு..044-24748959
நேர்காணல் நடைபெறும் நாள்
மேலதிக தகவலுக்கு https://www.esic.gov.in/attachments/recruitmentfile/79163523dc0431e9f199e0921b6451b3.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விமானப் படை பள்ளியில் வேலை
தஞ்சாவூரில் உள்ள விமானப் படை பள்ளியில் (Air Force School Thanjavu) உள்ள தலைமையாசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்
தலைமையாசிரியர் ( Headmistress (HM))
கல்வித் தகுதி
- பல்கலைக்கழக மானியக் குழு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் விமானப் படை பள்ளியில் தொடக்கநிலை, இடைநிலை வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- விமானப்படை பள்ளியில் பயிற்றுவிக்கும் பாடங்கள் தவிர்த்து மற்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க முடியாது.
- பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- PGT/ TGT/PRT நிலையில் இரண்டு ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.NTT மற்றும் தலைமையாசியராக இருந்த அனுபவம் வேண்டும்.
- ஆங்கில மொழியில் நன்றாக பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- MS Office, Conversant with POCSO Act, CBSE rules, NCERT, இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்.
- CTET/STET தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் தெரிவு செய்யும் முறையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்.
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
http://www.afschoolthanjavur.edu.in/career.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
EXECUTIVE DIRECTOR
AIR FORCE SCHOOL THANJAVUR
THANJAVUR – 613 005
TELE: 04362 226126
தொடர்புக்கு /
இ -மெயில் : afschooltjanjavur@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.02.2024