இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டுவரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் 1,625 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனயாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.


மத்திய அரசுப்பணியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இளைஞர்கள் பலருக்கு இருக்கும். இந்நிலையில் அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக தற்போது இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த முறை 1,625 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த பணியிடங்கள் 3 ஆண்டுகளுக்கு தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. எனவே இத்தகைய பணிகளுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? கல்வித்தகுதி? விண்ணப்பிக்கும் முறை? என்ன என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.





எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியாவில் பல்வேறு பணிக்கானத் தகுதிகள்:


மொத்த காலிப்பணியிடங்கள் – 1,625


துறைவாரியான காலிப்பணியிட விபரங்கள்:


எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் – 814


எலக்ட்ரீசியன் – 184


ஃபிட்டர் – 627


கல்வித்தகுதி:


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்/எலக்ட்ரீசியன்/ஃபிட்டர் பிரிவுகளில் ஐடிஐ படித்து முடித்திருக்க வேண்டும்.


இதோடு  சம்பந்தப்பட்ட துறைகளில் ஒராண்டு அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 31.03.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருந்தப்போதும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என  வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட தகுதியும், எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், https://careers.ecil.co.in/advt1322.php என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 11, 2022


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஐடிஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பள விபரம்:


தகுதியின் அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனப் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு,  மாதந்தோறும் முதல் ஆண்டு – ரூ. 20,480ம், இரண்டாம் ஆண்டு – ரூ. 22,528, மூன்றாம் ஆண்டு – ரூ. 24,780 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, https://careers.ecil.co.in/app/ADVT_13_2022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.