Eastern Railway Recruitment 2022: கிழக்கு ரயில்வேயில் உள்ள குரூப்- சி பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 

பணி குறித்த விவரங்கள்:

பணி: குரூப்- சி ( விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் வழங்கப்படுகிறது )

பணிகளின் எண்ணிக்கை: 21

கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் - 29ஆம் தேதி

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: இணையதளத்தில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 

  • முதலில் Eastern Railway (indianrailways.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • விண்ணப்ப படிவத்திற்குச் செல்ல இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்Eastern Railway (indianrailways.gov.in)
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.Eastern Railway (indianrailways.gov.in)

குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்

மற்றொரு பணி:

TNCSC: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு; 8-ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.. கூடுதல் விவரங்களுக்கு..............

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பெரம்பலூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக பணியிடம் காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 

பணி குறித்த விவரங்கள்:

பணி: பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர்

கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு,B.sc (அறிவியல்)

வயது: 32 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -30

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் முகவரி:

துணை மணடல மேலாளர், மணடல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், துறை மங்கலம்

துணை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், துறை மங்கலம்  என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். 30.09.2022 

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் https://tncsc.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

Also Read: NABARD: நபார்டு வங்கியில் 177 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?