திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திட்ட அலுவலகத்தில் உள்ள ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


Aspirational Block Fellow


கல்வி மற்றும் பிற தகுதிகள்



  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • டேட்டா அனலிசிஸ், ப்ரெசண்டேசன் ஸ்கில்ஸ், புராஜெக்ட் மேனேஜ்மெண்ட் உள்ளிட்டவற்றை தெரிந்திருக்க வேண்டும்.

  • சமூக ஊடகங்கள் பயன்படுத்த வேண்டும்.

  • நல்ல மொழியாளுமை வேண்டும். தமிழ் மொழி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

  • இதற்கு தேர்வு செய்யப்படுவர் திருவண்ணாமலையில் உள்ள திட்ட அலுவலக பணிகளோடு டெல்லியில் உள்ள நித்தி ஆயோக் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் உடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கும். 

  •  Good Governance practices(GGP) ஆவணப்படுத்த வேண்டும்.

  • DM/DC/CDO/CEO/BDO/State Nodal  Officer(SPC)/NITI உள்ளிட்ட அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

  • குழுவினருடன் பணியாற்ற உற்சாகத்துடன் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


இதற்கு மாத ஊதியமாக ரூ.55,000 வழங்கப்படுகிறது. 


விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்



  • 10-வது, 12-வது தேர்ச்சி சான்றிதழ்

  • மதிப்பெண் சான்றிதழ்

  • வயது சான்று மற்றும் பணி அனுபவ சான்றிதழ்


பணிக்காலம்


இது ஓராண்டு கால பணியாகும். பணி திறன் அடிப்படையில் தேவையிருப்பின் பணிக்காலம் நீட்டிக்கப்படும். 


விண்ணப்பிப்பது எப்படி?


https://tiruvannamalai.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


The District Planning Officer,
District Planning Cell,
4th Cross Road, Gandhi Nagar,
Tiruvannamalai District. 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.11.2023 மாலை 5.45 மணி வரை


வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2023/11/2023110423.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


AAI Recruitment


இந்திய விமான நிலையங்களில் உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:


 Junior Executive


மொத்த பணியிடங்கள் - 496


கல்வித்தகுதி: 


இதற்கு விண்ணப்பிக்க பொறியியல் படிப்பில் இளங்கலை படித்திருக்க வேண்டும். 


இயற்பியல், கணிதம் உள்ளிட்ட துறைகள் கொண்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். 
https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Detailed%20ATC%20Advertisement%2005-2023.pdf


வயது வரம்பு


30.11.2023-இன் அடிப்படையில் அதிகபட்ச வயது 27-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


ஜூனியர் எக்ஸிக்யூட்டர் குரூப் -பி லெவல் 1 ரூ.40,000 - 3% - 1,40,000 ஊதியமாக வழங்கப்படும். 
 


விண்ணப்பிப்பது எப்படி?


https://www.aai.aero/en/recruitment/release/307779- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


கூடுதல் தகவல்களுக்கு:


ஆங்கில மொழியில் அறிக்கை- https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Detailed%20ATC%20Advertisement%2005-2023.pdf என்பதை க்ளிக் செய்து காணலாம்.


விண்ணப்பிக்கும் முறை: -


https://www.aai.aero/en/recruitment/release/307779 - இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில் https://www.aai.aero/en/careers/recruitment- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • பின்னர் ’Careers’ என்பதை கிளிக் செய்யவும்.

  • புதிதாக தோன்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும். https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/85992/Index.html

  • பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தில், கேட்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளீடு செய்யவும். 

  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 

  • பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டும்.

  • பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2023


இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Detailed%20ATC%20Advertisement%2005-2023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.