சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தற்காலிக வேலைவாய்ப்பு மட்டுமே என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

  • ஆயுஷ் மருத்துவ அதிகாரி
  • Dispenser (சித்தா)
  • Dispenser (ஆயுர்வேதா)
  • உதவியாளர் (சித்தார்)
  • மாவட்ட திட்ட மேலாளர் (சித்தா)
  • தரவு உள்ளீட்டாளர்
  • ஆயுஷ் மருத்துவர்
  • Therapeutic Assistant (Male -1 & Female -1)
  • ஆயுஷ் மருத்துவர் (சித்தா)
  • மருத்துவ அதிகாரி 
  • ஸ்டாஃப் நர்ஸ்
  • சுகாதார கண்காணிப்பாளர்
  • டேட்டா மேலாளார்
  • Psychiatric Social Worker
  • Physiotherapist
  • Programme Cum Administrative Assistant
  • Operation Theatre Assistant
  • Radiographer
  • பாதுகாவலர்

கல்வித் தகுதி:

  • ஆயுஷ் மருத்துவ அதிகாரி பணிக்கு கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BSMS பட்டப்படிப்ப்பு தேர்ச்சி பெற்றும் Tamil Nadu Dental Council Registration செய்தும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • சித்தா மற்றும் ஆயுர்வேதம் துறை Dispenser பணிக்கு விண்ணப்பிக்க ஃபார்மஸி துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.  
  • உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 
  • மாவட்ட திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க BAMS/BUMS/ BHMS/ BSMS/BNYS ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தரவு உள்ளீட்டாலர் பணிக்கு பி.டெக்., பி.சி.ஏ. பி.பி.ஏ. படித்திருக்க வேண்டும்.
  • Therapeutic Assistant பணிக்கு Nursing Therapist படிப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • அறுவைச் சிகிச்சை ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க OT Technician படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

  • ஆயுஷ் மருத்துவ அதிகாரி - ரு.34,000/-
  • Dispenser (சித்தா) - ரூ.750/- (நாள் ஒன்றிற்கு)
  • Dispenser (ஆயுர்வேதா) -  ரூ.750/- (நாள் ஒன்றிற்கு)
  • உதவியாளார் (சித்தார்) -  ரூ.300/- (நாள் ஒன்றிற்கு)
  • மாவட்ட திட்ட மேலாளர் (சித்தா) - ரூ.30,000/-
  • தரவு உள்ளீட்டாளர் - ரூ.15,000/-
  • ஆயுஷ் மருத்துவர் - ரூ.40,000/-
  • Therapeutic Assistant (Male -1 & Female -1) - ரூ.15,000/-
  • ஆயுஷ் மருத்துவர் (சித்தா) - ரூ. 40,000/-
  • Dispenser (சித்தா) - ரூ.15,000/-
  • மருத்துவ அதிகாரி - ரூ.60,000/-
  • ஸ்டாஃப் நர்ஸ் - ரூ.18,000/-
  • சுகாதார கண்காணிப்பாளர் - 14,000/-
  • டேட்டா மேலாளர் - ரூ.20,000/-
  • Psychiatric Social Worker - ரூ.18,000/-
  • Physiotherapist - ரூ.13,000/-
  • Programme Cum Administrative Assistant - ரூ.12,000/-
  • Operation Theatre Assistant- ரூ.11,200/-
  • Radiographer - ரூ.10,000/-
  • பாதுகாவலர் - ரூ.8,500/-

எப்படி விண்ணப்பிப்பது?

 பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.

https://salem.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். 

தேந்தெடுக்கும் முறை:

இதற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதாட்ர அலுவலர்

மாவட்ட நல வாழ்வு சங்கம், 

பழைய நாட்டாண்மை கட்டட வளாகம், 

சேலம் - 636 001

விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.08.2024

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2024/08/2024080883.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.