குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் செயக்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Protection Officer (Non Institutional Care) 

சமூகப் பணியாளர்கள் 

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் மேம்பாடு/ மனித உரிமைகள் / பொது நிர்வாகம்/ உளவியல், மனநலம்/ சட்டம்/ பொது சுகாடஹரம்/ சமூக வள மேம்பாடு ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சமூகப்பணி / சமூகவியல், / குழந்தைகள் மேம்பாடு / மனித உரிமைகள்/ பொது நிர்வாகம்/ உளவியல்/மன நலம்/ சட்டம் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சமூகப்பணி பணியிடத்திற்கு விண்னப்பிக்க ஷோஷியாலஜி, சமூக அறிவியல் ஆகிய துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

கணினி பயன்படுத்துவதில் திறன் இருக்க வேண்டும். 

10+2+3 என்ற முறையில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்: 

Protection Officer(Non Institutional Care) - ரூ.27,804/- 

சமூகப் பணியாளர்கள் - ரூ.18,536.-

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்தப் பணிக்கு  நேர்காணல், சான்றிதழ் சரிபார்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க https://thoothukudi.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தொல் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபாலில்லோ அனுப்ப வேணுடும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.02.2025 மாலை 5.45 வரை 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணிநகர், பாளை ரோடு, தூத்துக்குடி - 628 003. 

தொலைபேசி எண்: 0461-233118

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2025/02/2025021829.pdf -  என்ற இணைப்பை களிக் செய்து காணவும். 


மேலும் வாசிக்க..

Jobs: 8வது படித்திருந்தால் போதும்... பயிற்சியுடன் கூடிய உடனடி வேலை... எங்கு, எப்போது தெரியுமா?

richy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?