டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் நாளைக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு தொடங்கியுள்ள டிஜிட்டல் இந்தியா (Digital India) என்னும் திட்டத்தின் மூலம்  இந்தத் அரசின் சேவைகளை மின்மயமாக்கி, மக்களிடம் இதனைக்கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக ஊர்களுக்கும் அதிவேக இணைய வசதி அளிக்கப்படும். இதோடு மின்மயமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல், மின்மயத்திலான சேவைகளை வழங்கல், கணினிப் பயன்பாட்டுக்கான கல்வியறிவைப் புகட்டல் போன்ற பல்வேறு வழங்கிவருகிறது. தற்போது அனைத்து துறைகளும் மின்மயமாக்கப்பட்டு வரும் சூழலில், தற்போது டிஜிட்டல் இந்தியா காரப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? எப்படி தேர்வு செய்யப்படுகிறது என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.





டிஜிட்டல் இந்தியா கார்பபரேஷன் லிமிடெட் நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்:


மொத்த காலிப்பணியிடங்கள் – 15


துறை வாரியாக காலிப்பணியிட விபரங்கள்:


Program Director- 1


Portal Director – 1


Finance Manager – 1


Marketing Manager -  2


Program Manager – 5


Investment  Manager – 1


Portal Manager – 1


Financial coordinator – 1


Admin Staff – 2


பணியிடம் – புதுடெல்லி


கல்வித்தகுதி:


Program Director – Master Degree


Portal Director – Degree in Engineering


Finance Manager – CA, MBA


Marketing Manager -  Bachlor Degree


Program Manager – Degree in Engineering


Investment  Manager – MBA, Bachlor degree


Portal Manager – Degree in Engineering


Financial coordinator – B.com


Admin Staff – Diploma, Graduate


விண்ணப்பிக்கும் முறை:


https://ora.digitalindiacorporation.in/# என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இதனையடுத்து விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் முகவரிக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


Electronics Niketan annexe,


6, CGO complex lodhiroad,


New Delhi – 110003.


விண்ணப்பக்கட்டணம் எதுவும் கிடையாது.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே டிஜிட்டல் இந்தியாவில் பணிபுரிய ஆர்வம் உள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://ora.digitalindiacorporation.in/# என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.