மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் தொலைத்தொடர்புத்துறையில் காலியாக உள்ள young professional பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற பிப்ரவரி 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


இந்திய தொலைத்தொடர்புத்துறை நாட்டின் நாட்டின் சமூக பொருளியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு, சிற்றூர்ப் பகுதிகளுக்கும் நகரியப் பகுதிகளுக்கும் இடையே இருந்துவந்த எண்ணிமப் பிரிவை குறுக்க குறிப்பிடத்தக்கப் பங்காற்றி வருகிறது. மேலும் அரசின் வெளிப்படைத்தன்மையை கூட்டும் வண்ணம் மின்னாளுகையை அறிமுகப்படுத்த உதவியாக மத்திய அரசின் தொலைதொடர்பு செயல்பட்டுவரும் நிலையில் தற்போது பல்வேறு பிரிவுகளில் young professional பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


எனவே இப்பணிக்கு  விண்ணப்பிக்க என்னென்னத் தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்வோம்.



தொலைதொடர்பு துறையில் young professional பணிக்கானத் தகுதிகள்:


மொத்த பணியிடங்கள் – 20


கல்வித்தகுதி:


விண்ணப்பதாரர்கள் பட்டம், பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ். சிஎஸ் போன்ற பிரிவுகளில் முதுநிலைப்பட்டம், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் படித்திருக்க வேண்டும்.


எம்பிஏ, சிஏ, ஐடிடபுள்யுஏ, சிஎப்ஏ  சட்டத்துறையில் பட்டம், பொருளாதாரம், புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


Category C: Degree/ PG in Law with domain knowledge in required areas.


Category D: PG in Economics/ Statistics or MBA with specialization in Operations Research.


இதர தகுதிகள்:


விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் முதலில், https://forms.app/auth/signin?redirect=%2Fform%2F61e53e13d42da26ef87cf707%23formview என்ற இணையதளப்பக்கத்தின் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படை விபரங்களையும் நிரப்பிய பின்னர், வருகின்ற பிப்ரவரி 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி -arvindk.jha29@gov.in


தேர்வு செய்யும் முறை:


மத்திய தொலைத்தொடர்பு நிறுவனப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேர்காணலுக்கானத தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


சம்பளம் :


தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 60 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.


எனவே மத்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பமுள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்பு குறித்த கூடுதல் விபரங்களை www.dot.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துகொள்ளலாம்.