சிஆர்பிஎஃப் மருத்துவமனைகளில் பல்வேறு பாராமெடிக்கல் துறைகளில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஓய்வு பெற்ற சிஆர்பிஎஃப் வீரர்களாகவும், 62 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


இந்தியாவில் துணை ராணுவ படைகளில் ஒன்று தான் சிஆர்பிஎப். தற்போது துணைபடை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவத் தேவைகளை நிறைவேற்றி வருகிறது.  சிஆர்பிஎஃப் மருத்துவமனைகள். இந்நிலையில் இந்த மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கான அரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிஆர்பிஎப் மருத்துவமனைகளில்  Lab technician, Tele operator, peon, dresser, X-ray technician, Dental technician, ECG technician, Blood bank Technician, Physsiotherapist, radiographer, nursing assistant, pharmacist, Staff nurse போன்ற பாரா மெடிக்கல் துறைகளில் பணிபுரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





சிஆர்பிஎப் மருத்துவமனைகளில் பாராமெடிக்கல் துறையில் சேர்வதற்கான தகுதிகள்:


சிஆர்பிஎஃப் மருத்துவமனைகளில் செவிலியர், மருந்தாளர் என பல்வேறு பாரா மெடிக்கல் துறைகளில் பணிபுரிய வேண்டும் என நினைப்பவர்கள், துணை ராணுவம் அல்லது ராணுவத்தில் பாரா மெடிக்கல் துறைகளில் ஏதேனும் ஒன்றில் பணிபுரிந்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள் 62 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே Lab technician, Tele operator, peon, dresser, X-ray technician, Dental technician, ECG technician, Blood bank Technician, Physsiotherapist, radiographer, nursing assistant, pharmacist, Staff nurse என 2449 பாராமெடிக்கல் பிரிவுகளின் கீழ் பணிபுரிய மேற்கூறிய தகுதியும், ஆர்வமும் உளள  முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் துணை ராணுவப்படையினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.





இப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு CRPF Composite Hospital, Avadi, Chennai ல் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நேர்முகத்தேர்விற்கு செல்லும் விண்ணப்பத்தாரர்கள் மறக்காமல்  தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழை கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்கான கூடுதல் விபரங்களை அறிய WWW.crpf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.