நீலகிரியில் மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் (Defence Services Staff College, Wellington) பன்முக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி விவரம்

பன்முக உதவியாளர் (Multi Tasking Staff –Office & Training)

கல்வித் தகுதி: 

இதற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்

18 முதல் 25 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்

 இந்த வேலைக்கு ரூ. 18,000 – 56,900 ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை 

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.dssc.gov.in/files/Recruitment_Six_MTS.pdf  -என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப அனுப்ப வேண்டிய முகவரி -

 The Commandant,

Defence Services Staff College,

Wellington (Nilgiris) – 643 231.

Tamil Nadu.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2024

இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய https://www.dssc.gov.in/files/Recruitment_Six_MTS.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.